சென்னை:

த்தியநிதி அமைச்சர் கடந்த 1ந்தேதி தாக்கல் செய்த மத்திய நிதி நிலை அறிக்கையில், தமிழகம் கடுமையாக புறக்கணிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ரூ. 12ஆயிரம் கோடியிலான 10 புதிய ரயில்வே திட்டங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் என வெறும் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2020-21-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதில், நாடு முழுவதும்  உள்ள 17 ரயில்வே மண்டலங்களுக்கு சேர்த்து ரூ.70,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வேக்கு ரூ.4,057 கோடி நிதி மட்டுமே நிதி ஒதுக்கி உள்ளது.

ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.70ஆயிரம் கோடி நிதியில், தெற்கு ரயில்வே பங்காக ரூ.2,876 கோடி  ஒதுக்கீடும், கடன், கடன் பத்திரம் வெளியீடு போன்றவை  மூலம் ரூ.1,181 கோடி வசூலிக்கப்படும் என்றும்,  மொத்தம் ரூ.4,057 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் அதிர்ச்சிக்குள்ளாக்கிய தகவல் என்னவென்றால்,  தமிழகத்தில்புதிதாக தொடங்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ள ரூ.12ஆயிரம் கோடி மதிப்பிலான 10 திட்டங்களுக்கு தலா ரூ.ஆயிரம் வீதம் மொத்தம் 10ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி,  1) சென்னை – மாமல்லபுரம் – கடலூர் (179 கி.மீ),2)  திண்டிவனம் – செஞ்சி – திருவண்ணாமலை (70 கி.மீ), 3) அத்திப்பட்டு – புத்தூர் (88 கி.மீ), 4) ஈரோடு – பழநி (91 கி.மீ), 5) ஸ்ரீபெரும்புதூர் – இருங்காட்டுக்கோட்டை – கூடுவாஞ்சேரி (60 கி.மீ), 6) மதுரை – அருப்புக்கோட்டை – தூத்துக்குடி, 7) மொரப்பூர் – தருமபுரி உள்பட  10 புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாற்றந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு வெறும் ரூ.1000 மட்டுமே நிதி ஒதுக்கி இருப்பது தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி மக்களிடையேயும் கடுமையாக அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும்,  ராமேஸ்வரம் – தனுஷ்கோடி புதிய பாதை திட்டத்துக்கும் கடந்த ஆண்டில் ரூ.49 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு வெறும் ரூ.2 கோடியே 70 லட்சம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால், புதிய பாலம் அமைக்கும் பணியும் தொய்வடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும்,  அகலப்பாதை திட்டத்துக்கு ரூ.175 கோடியும், இரட்டை பாதைதிட்டத்துக்கு ரூ.57 கோடியும், மேம்பாலங்கள் உள்ளிட்ட பாலங்களை கட்ட ரூ.335 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அகலப்பாதை திட்டங்களில் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மதுரை -போடிநாயக்கனூர் திட்டத்துக்கு ரூ.75 கோடியே 18 லட்சமும், திருத்துறைப்பூண்டி – அகஸ்தியன் பள்ளி, மன்னார்குடி – பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை ரயில் திட்டங்களுக்கு என ரூ.100 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பாதைகளைப் புதுப்பித்து பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஒட்டுமொத்தமாக ரூ.730 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சரின் இந்த அறிவிப்புக் குமதுரை எம்.பி.  சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு காரணமாக  10  ரயில்வே திட்டங்களும்  கைவிடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  மேலும், உ.பி.யை தலைமையகமாக கொண்டு  வடக்கு ரயில்வே-க்கு வளர்ச்சி பணிகளுக்காக ரூ.7,000 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.. இது கண்டிக்கத்தக்கது என்று விமர்சித்து உள்ளார்.