காந்தி செல்வன்
காந்தி செல்வன்

சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து தி.மு.க.,வில் நிர்வாகிகள் மாற்றப்படலாம் என கடந்த சில நாட்களாக செய்திகள் உலா வந்தன. இதற்கிடையே இன்று தி.மு.க.,வில் சில மாவட்ட செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தி.மு.க., பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில்  நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் காந்திசெல்வன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பொறுப்பாளராக பார். இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். என்று கூறப்பட்டுள்ளது. மேலும், கோவை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் வீர.கோபால் நீக்கப்பட்டு, அவருக்கு பதில் பொறுப்பாளராக முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் துரைராஜ் நீக்கப்பட்டார். அவருக்கு பதில் பொறுப்பாளராக சிவ.பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.