டந்த சில மாதங்களாக திமுகவில் இருந்து ஒதுங்கி இருந்து வரும், திமுக துணைப்பொதுச்செய லாளரான வி.பி.துரைசாமி, மாற்று கட்சிக்கு செல்வதற்கு தயாராகி விட்டார். விரைவில் அதிகாரப்பூர்வமாக தேசியக் கட்சி ஒன்றில் சேர இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.
திமுக தலைவராக இருந்து வந்த கலைஞர் கருணாநிதி நோய்வாய்ப் பட்டதில் இருந்தே திமுக, கருணாநிதியின் குடும்ப கட்சியாகவும், குடும்ப உறுப்பினர்களின் தலையீடும் தலைத்தூக்கி வந்தது. இதனால் அவ்வப்போது சலசலப்பு எழுந்தாலும், கட்சியின் நலன் கருதி பெருந்தலைகள், அவற்றை வெளியே கசியவிடாமல் தவிர்த்து வந்தனர்.

ஆனால், கருணாநிதி மறைவுக்கு பிறகு, திமுகவில் ஏற்பட்டுள்ள சலசலப்பு கள் தீவிரமடைந்து உள்ளன. ஆனால், அதை மறைக்கும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின், தினசரி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு மக்களிடையே, தன்னி முன்னிலைப்படுத்தி வருகிறார். இதனால் திமுகவின் உள்கட்சி பூசல்கள் வெளிச்சத்தக்கு வராமல் மறைக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே திமுகவில் மேற்கொள்ளப்பட்ட சில மாற்றங்கள், உதயநிதி ஸ்டாலின் கட்சிக்குள் திணிப்பு, அவருக்கு முன்னுரிமை, ஸ்டாலினின் மருகன் சபரீசனின் ஆட்டம் போன்றவற்றால்,  கே.என்.நேரு மாற்றம் போன்ற நிகழ்வுகள், கட்சியின் மூத்த பெருந்தலைவர்கள் கடுமையான அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
இதுபோன்ற இக்கட்டான சூழலில்தான் கடந்த சில நாட்களுக்கு (18ந்தேதி) முன்பு  திமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான வி.பி.துரைசாமி தமிழக பாஜக தலைவரான எல்.முருகனை திடிரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு பாஜக அலுவலகமான தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நடைபெற்றது.
இது திமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே வேளையில் தமிழக அரசியலும் அதிர்வலை களை உருவாக்கி உள்ளன.  திமுகவில் உடைபெற்று வரும் உள்கட்சி விவகாரத்துக்கு இதுவே சாட்சி என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகின்றன.
ஆனால்,  பாஜக தலைவருடனான சந்திப்பு குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்க மறுத்து வந்த வி.பி.துரைசாமி தற்போது, தனது மனக்குமுறலை ஊடகத்துறையைச் சேர்ந்த சில நண்பர்களிடம் கொட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கட்சியில் தனக்கும் தனது பதவிக்கும்  சரியான மரியாதை கிடைக்காத நிலையில், தனது துணைப்பொதுச் செயலாளர் பதவியை பிடுங்கவும் ஸ்டாலின் குடும்பத்தினர் முடிவு செய்து விட்டதாகவும், அவர்களின் ஆட்டத்திற்கு தன்னால் தலையாட்ட முடியாது என்று கருதிய  வி.பி.துரைசாமி, என்ன செய்வதென்று தெரியாமல் பல நாட்களாக மனதுக்குள்ளே புளுங்கிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த உறவினர்  ஒருவரிடம் பேசியதாகவும், அவர்மூலம், பாஜக தலைவரை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், திமுக தரப்பிலோ,  வி.பி.துரைசாமி பாஜக தலைவர் சந்திப்பு குறித்து கேள்விப்பட்ட  ஸ்டாலின், வி.பி.துரைசாமியைத் தொடர்புகொண்டதாகவும், ஆனால், அவரிடம்  வி.பி.துரைசாமி, இது குடும்ப வகையிலான சந்திப்பு, அதான் போய் பார்த்துட்டு வந்தேன் என்று பதில் கூறியதாகவும் கூறப்பட்டது.
ஆனால்,  திமுகவில் அதிருப்தியில் உள்ள பெருந்தலைகள் கூறுவதோ வேறுவகையாக உள்ளது.
தமிழக பாஜகவில் தாழ்த்தப்பட்ட ஒருவருக்கு மாநிலத் தலைவர் பதவி வழங்கியதை சுட்டிக்காட்டி, திமுகவிலும், அதுபோல ஒரு தாழ்த்தப்பட்டவருக்கு முக்கியப் பதவி வழங்கப்படுமா என கடந்த மாதம் சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.
இந்த விமர்சனங்களை பொய்யாக்கும் நோக்கில், திமுகவிலும் சில மாற்றங்கள் செய்ய தலைமை முடிவு செய்ததாகவும், ஆனால், தற்போதைய நிலையில் ஒருசில பெருந்தலைகள் மீது கை வைக்க முடியாது என்பதால், வி.பி.துரைசாமியை கழற்றி விட சபரீசன் (ஸ்டாலின் மருமகன்) ஸ்கெட்ச் போட்டதாக கூறப்படுகிறது.
வி.பி.துரைசாமியை,  திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விடுவித்துவிட்டு, அந்த இடத்துக்கு ராஜாவை நியமிக்க ஸ்டாலின் குடும்பத்தினர் முடிவு செய்து உள்ளதாகவும், வி.பி. துரைசாமிக்கு, நேருக்கு கொடுத்ததுபோல ஒரு டம்மி பதவியை கொடுக்கலாம் என்று பேசியதாக வும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தனது நண்பர்கள் மூலம் தகவல் அறிந்த வி.பி. துரைசாமி நொந்துபோய் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும்,  கட்சி தலைமை மீதான  தனது அதிருப்தியைக் காட்டவே பாஜக தலைவர் முருகனை நேரில் சென்று சந்தித்திருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் பலமுறை ஆட்சியை பிடித்து அரியணை ஏற்றி தமிழகத்தை வழிநடத்திய பிரதான கட்சியான திமுக, தற்போது, தனது  கட்சித்தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது நம்பிக்கை இல்லாமல், தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில்,  பிரசாந்த்  கிஷோருக்கு கோடிக்கணக்கான ரூபாயை அள்ளிக்கொடுத்துள்ளது.

ஸ்டாலின் குடும்பத்தினரின் இந்த செயல்,   திமுக மூத்த தலைவர்களிடையே அதிருப்தியை உருவாக்கி உள்ளது. ஆனால், இதுகுறித்து ஸ்டாலினிடம் வினவினால், அவரும் சரியான பதில் தெரிவிக்க மறுத்து விடுவதாகவும், கட்சியை அவரது மருமகன் சபரீசன்தான் நிர்வகித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில்தான் வி.பி.துரைசாமி, பாஜகவுக்கு தாவ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
வி.பி.துரைசாமி போன்ற மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறினால் அது திமுகவுக்குத்தான் பின்னடைவு என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்..
ஸ்டாலினின்  சாணக்கியத்தனம் என்ன என்பதை விரைவில் எதிர்பார்ப்போம்…