சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சரியாக பணியாற்றாத கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க உயர்நிலைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை மேற்கொள்ள சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் இன்று நடந்தது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

2-ஜி வழக்கின் தீர்ப்பு நீதித்துறை மீது திமுக வைததுள்ள நம்பிக்கைக்கு உரமூட்டும் வகையில் அமைந்துள்ளது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சரியான முறையில் பணியாற்ற தவறிய தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒகி புயல் நிவாரணத்திற்கு ரூ.13,520 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடா செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். பெரும்பான்மை இழந்தும் தமிழக ஆட்சி நீடிப்பது ஜனநாயகத்திற்கு களங்கம் ஏற்படுத்தும்வகையில் உள்ளது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.