சென்னை: நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகள் என்னென்ன என்பது குறித்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40  மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுதினம், அதாவது மார்ச் 20ந்தேதி தொடங்குகிறது. வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள்  மார்ச் 27ந்தேதி. அதைத்தொடர்ந்து மார்ச் 28ந்தேதி  வேட்பு மனு பரிசீலனை நடத்தப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். தொடர்ந்து, ஏப்ரல் 19ந்தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற்று,  ஜூன் 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது. அன்றைய தினமே வெற்றி தோல்வி முடிவுகள் தெரிய வரும்.

இந்த நிலையில் திமுக கூட்டணியில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட சில சிறிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகள் மற்றும் மதிமுக போட்டியிடும் ஒரு தொகுதி குறித்த பட்டியல் வெளியானது.

இந்த நிலையில், திமுக போட்டியிடும் 21 தொகுதிகள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுக போட்டியிடும் 21 தொகுதிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

திமுக போட்டியிடும் தொகுதிகள் விவரம்:

  1. வடசென்னை
  2. மத்திய சென்னை
  3. தென்சென்னை
  4. ஸ்ரீபெரும்புதூர், 
  5. காஞ்சிபுரம்
  6. அரக்கோணம், 
  7. திருவண்ணாமலை
  8. வேலூர்,
  9. ஆரணி, 
  10. தருமபுரி,
  11. பெரம்பலூர்,
  12. கள்ளக்குறிச்சி,
  13. சேலம்,
  14. நீலகிரி,
  15. கோவை,
  16. ஈரோடு
  17. பொள்ளாச்சி,
  18. தேனி, 
  19. தஞ்சாவூர்,
  20. தென்காசி,
  21. தூத்துக்குடி

தமிழகத்தில் 21 நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. விசிகவுக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் என 2 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. மேலும்,  சிபிஐக்கு 2 தொகுதிகளும், சிபிஎம் கட்சிக்கு 2 தொகுதிகளும், மதிமுகவிற்கு ஒரு தொகுதியும், இயூமுலீக்குக்கு ராமநாதபுரம் தொகுதியையும், கொமதேக நாமக்கல் தொகுதியையும் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம்:

  1. ✦ சென்னை வடக்கு
    ✦ சென்னை தெற்கு
    ✦ மத்திய சென்னை
    ✦ காஞ்சிபுரம் ( தனி)
    ✦ அரக்கோணம்
    ✦ வேலூர்
    ✦ தருமபுரி
    ✦ திருவண்ணாமலை
    ✦ சேலம்
    ✦ கள்ளக்குறிச்சி
    ✦ நீலகிரி (தனி)
    ✦ பொள்ளாச்சி
    ✦ கோவை
    ✦ தஞ்சாவூர்
    ✦ தூத்துக்குடி
    ✦ தென்காசி (தனி)
    ✦ ஸ்ரீபெரும்புதூர்
    ✦ பெரம்பலூர்
    ✦ தேனி
    ✦ ஈரோடு
    ✦ ஆரணி
  2. ✦ திருவள்ளூர் (தனி) (காங்)
    ✦ கடலூர் (காங்)
    ✦ மயிலாடுதுறை (காங்)
    ✦ சிவகங்கை (காங்)
    ✦ திருநெல்வேலி (காங்)
    ✦ கிருஷ்ணகிரி (காங்)
    ✦ கரூர் (காங்)
    ✦ விருதுநகர் (காங்)
    ✦ கன்னியாகுமரி (காங்)
    ✦ புதுச்சேரி (காங்)
  3. ✦ சிதம்பரம் (விசிக)
    ✦ விழுப்புரம் (விசிக)
  4. ✦ மதுரை (சிபிஎம்)
    ✦ திண்டுக்கல் (சிபிஎம்)
  5. ✦ திருப்பூர் (சிபிஐ)
    ✦ நாகப்பட்டினம் (சிபிஐ)
  6. ✦ நாமக்கல் (கொமதேக)
    ✦ திருச்சி (மதிமுக)
    ✦ ராமநாதபுரம் (ஐயூஎம்எல்)