சென்னை:
தியம் சபை கூடியதும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் முத்தையா   89 வயல்காட்டு பொம்மைகள் என திமுக உறுப்பினர்களை மறைமுகமாக  தாக்கி பேசினார்.
இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து, அவரது பேச்சை சபைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு முழக்கமிட்டனர்.
assembvlyt
அதற்கு  பதில் அளித்த முதல்வர் ஜெயலலிதா, தமிழில் வயக்காட்டு பொம்மை என்றால், அது ஒன்றும்  சொல்லக்கூடாத சொல் அல்ல. கெட்ட வார்த்தை அல்ல.  அதிமுக உறுப்பினர் பேசுகின்ற போது யாருடைய பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஏன் இப்படி சத்தம் போடுகின்றார்கள் என்று புரியவில்லை. ஆளுங்கட்சி உறுப்பினர், வயலில் இருக்கும் வயக்காட்டுப் பொம்மைகளைப் பற்றிப் பேசினார்.  இங்கு இருக்கின்றன எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களைத் தான் குறிப்பிடுகிறார் என்று ஏன் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று புரியவில்லை என பதில் அளித்தார்.
தொடர்ந்து திமுகவினர் முத்தையாவின் பேச்சை நீக்க வற்புறுத்தினர். ஆனால்,  சபாநாயகர், முத்தையாவின் பேச்சை நீக்க மறுத்தார். இதனால் திமுக காங்கிரஸ் கட்சியினர் பெரும் அமளியில் ஈடுபட்டனர்.
இதன் அமளி காரணமாக சபாநாயகர் சபை நாளை வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார்.  அமளி நீடித்த நிலையில் சட்டசபை அலுவல்கள் இன்று நிறைவு பெறுவதாக சபாநாயகர் தெரிவித்தார்.
சபாநாயகரின் இந்த முடிவை எதிர்த்து திமுக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 10 நிமிடம் அவையிலே அமர்ந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
சபையைவிட்டு வெளியே வந்த எதிர்க்ட்சி தலைவர் ஸ்டாலின் கூறியததாவது:
அதிமுக உறுப்பினர் முத்தையா திமுகவினரை நோக்கி வயகாட்டு பொம்மைகள் என கொச்சைபடுத்தினார். அப்போது அவையில் இருந்த முதல்வர், உறுப்பினர் கூறியது Un parliament வார்த்தை இல்லை. ஆதலால் இதை  அவைகுறிப்பிலிருந்து நீக்க கூடாது, என கூறினார்.
உறுப்பினர் கூறியதை நீக்க கோரினோம், சபாநாயகர் மறுத்து விட்டார். அதிமுக உறுப்பினர்களை 132கொத்தடிமைகள் என நான் கூறியதை மட்டும் அவை குறிப்பிலிருந்து நீக்கியுள்ளார்.
அதிமுக உறுப்பினர்கள் யார் பெயரையும் குறிப்பிடவில்லை என நியாயபடுத்தியதை போல நானும் யார் பெயரையும் குறிப்பிடவில்லை. ஆனால் நாங்கள் பேசியதை மட்டும் நீக்கி சர்வாதிகாரமாக சபாநாயகர் செயல்படுகிறார். இது வெக்கப்படவேண்டியது என்றார்.
ராமசாமி(காங்.,):  மக்கள் பிரச்சனை குறித்து பேசவிடாமல் அதிமுக உறுப்பினர்கள் திசை திருப்புகின்றனர்.  சட்டமன்றத்தில் முறையாக விவாதம் நடைபெற அரசு வழிவகை செய்ய வேண்டும்.
அபுபக்கர் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற வரலாற்றில் இன்றைய தினம் ஒரு கருப்பு தினம். சபாநாயகர் நீதிபதி போன்று செயல்பட வேண்டும் ஆனால் இவர் ஒருதலை பட்சமாக செயல்படுகிறார். ஜனநாய கடமை ஆற்றவிடாமலும், மக்கள் பிரச்சனை பேச எதிர்கட்சிகளை அனுமதிப்பதில்லை. அதிமுக உறுப்பினர்கள் எதிர்கட்சிகளை தொடர்ந்து தரம் தாழ்ந்து பேசுவதை சபாநாயகர் அனுமதிப்பது ஏற்கமுடியாது.