சென்னை:
திமுக உறுப்பினர் முத்தையா பேசிய வயக்காட்டு பொம்மை என்ற சொல் மரபு மீறிய சொல்லோ, ,கெட்ட வார்த்தை அல்ல என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் இன்று அதிமுக எம்எல்ஏ முத்தையா பேசும்போது,  சட்டசபையில் 89 வயக்காட்டு பொம்மைகள் இருப்பதாகக் கூறினார். இதனால், திமுகவின் 89 எம்.எல்.ஏக்களும் கடும் அமளியில் ஈடுபட்டார்கள். . அந்த வார்த்தையை அவைக் குறிப்பில் இருந்து நீக்குமாறு கோரினர். அதை சபாநாயகர் ஏற்றுக் கொள்ளாததால் அமளி நீடித்தது.  இதையடுத்து  அவை நடவடிக்கைகள் நாளை வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
a
அவை ஒத்திவைக்கப்பட்ட பின்னரும் திமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளியேறாமல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முதல்வர் ஜெயலலிதா, “தமிழில் வயக்காட்டு பொம்மை என்றால், அது ஒன்றம் நாடாளுமன்றத்தில் சொல்லக்கூடாத சொல்லோ . கெட்ட வார்த்தையோ அல்ல”  என்று கூறினார்.

முத்தையா
முத்தையா

மேலும் அவர், “அதிமுக உறுப்பினர் பேசும்போது, யாருடைய பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஏன் இப்படி சத்தம் போடுகின்றார்கள் என்று புரியவில்லை. ஆளுங்கட்சி உறுப்பினர், வயலில் இருக்கும் வயக்காட்டுப் பொம்மைகளைப் பற்றி பேசினார். இங்கு இருக்கின்றன எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களைத் தான் குறிப்பிடுகிறார் என்று ஏன் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று புரியவில்லை” என்றார்.