loan 2 feature
 
பாண்டிச்சேரியில் உள்ள ஒரு  பிரஞ்சு நிறுவனத்தில் பணியாற்றும் ஜி.வேங்கடசுப்பிரமணியன் மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்களும் தமிழ்நாட்டில் உள்ள 20 கிராமங்களில் உள்ள குடும்பங்கள் மத்தியில் இருக்கும் கடன் சுமை   குறித்துகடந்த 15 ஆண்டுகளாக ஆராய்ந்து வருகின்றனர். பெரும்பாலான கிராமங்கள்  கடலூர் மற்றும்  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளன.
லோன்
இந்தக் குடும்பங்கள் எவ்வளவு கடன் வாங்குகின்றனர் என்பது பற்றியும் எப்படி வாங்குகின்றனர் என்பது பற்றியும் சில புதிர்களுக்கு அவர்களது ஆய்வு விடையளிக்கின்றது.
2001 ஆம் ஆண்டில், இந்தக் குடும்பங்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.16,000 ஆக இருந்தது. சராசரி கடன் ரூ.10,000 ஆக இருந்தது. 2016 ஆண்டில், அவர்களது ஆண்டு வருமானம் ரூ.80,000 வரை  ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது. எனினும், சராசரி கடன், ரூ.2,50,000 ஆக உள்ளது. இது கிட்டத்தட்ட 25 மடங்கு அதிகரித்துள்ளது எனலாம்.
loan 2 cமாறிவரும் கடன் வாங்கும் சூழல்:
அவர்கள் ஆய்வு செய்த குடும்பங்கள் ,  கடன் வாங்கும்  முறையில் பல மாற்றங்கள்  ஏற்பட்டுள்ளன.   ஆரம்பத்தில் நில-உரிமையாளர் சமூகங்கள் மட்டுமே (  முதலியார்கள், செட்டியார்கள் அல்லது ரெட்டியாரகள்) தான் கடன் கொடுப்பவர்களாக இருந்தனர்.
ஆனால் இப்போது, பெரும்பாலாக தாழ்த்தப்பட்டோர் தங்களுக்குளேயே கடன் கொடுத்து வாங்குவதாக வேங்கடசுப்பிரமணியன் கூறினார்.
“ஒரு குடும்பம் ரூ.50,000 கடன் வாங்கி அதில் ஒரு பகுதியாய், ரூ.25,000 மற்றவர்களுக்குக் கடன் கொடுக்கின்றனர்” என்று அவர் கூறினார்.
அதே நேரத்தில், ஒரு காலத்தில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த சமூகத்தினர் கடன்வழங்கும்  தொழிலில் நுழைந்துவிட்டனர் . உதாரணமாக, தென் தமிழ் நாட்டைச் சேர்ந்த நாடார்கள், மாநிலத்தின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளில் கடன் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளும் மக்கள் கடன் கொடுப்பதிலும் வாங்குவதிலும் எப்படி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பதை  பார்ப்போம்:
திருச்சி அருகில் ஒரு கிராமத்தில், ஒரு ஆரம்ப சுகாதார மையத்தில் ஒரு செவிலியர் (பெயர் கூற விரும்பாத ) கடன் சார்ந்த நுகர்வு கலாச்சாரம் குறித்து  ” மக்கள், அடுக்கு மாடி குடியிருப்பு, நிலங்கள், கார் என்று அனைத்தையும் கடனின் வாங்குகிறார்கள். இது அனைத்தும் கடந்த பத்து ஆண்டுகளில் தொடங்கியது. “என்றார்.
திருச்சியில்,  சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா கிளையின் மேலாளர், ” ரூ.10 இலட்சம் கைவசம் உள்ள வர்த்தகர்கள், ரூ.30 லட்சம் கடன் வாங்கி, ரூ .20 லட்சத்தைத் தங்கள் நிறுவனத்திற்காகப் பயன்படுத்தி மீதமுள்ள ரூ.20 லட்சத்தை மற்றவர்களுக்குக் கடன் அளிக்கின்றனர்” என்றார்.
அவர்கள் மிக அதிக வட்டி விகிதத்தில் கடன் கொடுப்பதாக அவர் கூறினார். உதரணமாக, ரூ.50,000 கடன், ஒரு நாளைக்கு ரூ.600 என்ற கணக்கில் 100 தவணைகளில் திரும்பக் கொடுக்க வேண்டும்- அதாவது 300%  வட்டி விகிதத்தில்.
சமீப காலங்களில் கடன் வழங்குவது குறைந்து வருகின்றது . பெரும்பாலான (75%) கல்வி கடன்கள் விரைவில் திரும்ப வசூலிக்க முடியாத சூழ்நிலையில் உள்ளன. அவை வாராக்கடன்  எனப்படும் நான் பெர்ஃபார்மிங்க் அசெட் ( non-performing assets) ஆகவே உள்ளது” என்றார்.
பாண்டிசேரி மற்றும் நாகப்பட்டிணத்திற்கு இடையில் உள்ள பிச்சாவரத்தில் மீனவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்கள் அன்றாடச் செலவுகளுக்கே கடன் வாங்க வேண்டிய சூழல் நிலவுகின்றது. இவர்கள், அதிக வட்டிக்கு , அதாவது , ஆறு பைசா வட்டிக்கு கடன் வாங்குகின்றனர்.
இவர்களுக்கு கடன் வழங்குபவர்கள் மாறியுள்ளனர். புதிதாக, அரசு ஊழியர்களிடமும் மீனவ மக்கள் கடன் வாங்கத் துவங்கியுள்ளனர்.
பிச்சாவரம் , பாண்டிச் சேரி, திருச்சி, சிவகங்கை அனைத்தும் மத்திய தமிழகத்தில் உள்ளன.
என்எஸ்எஸ்ஓ நடத்திய விவசாய குடும்பங்களின் நிலைமை மதிப்பீட்டு ஆய்வு முடிவின்படி,  கடன் வாங்குபவரின் எண்ணிக்கையுடன், கடன் கொடுப்பவரின் எண்ணிக்கையும் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றது.
விவசாயிகள் ஏன் கடன் வாங்குகின்றனர் ?
இதை புரிந்து கொள்வது எளிது. பாரம்பரிய விவசாயத் தொழிலோ, அதன் நவீன மாற்றான கூலித் தொழிகளும் இவர்களின் குடும்பத்தை கரைசேர்க்க போதவில்லை. குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத் தேவைகளுக்கு கடன் வாங்கும் சூழல் நிலவுகின்றது.
loan 2 d
சிவகங்கை அருகில் உள்ள மகாசிவனேண்டலைச் சேர்ந்தவர் சம்பத், வயது 50.

இவர் வீடு கட்டுவதற்காகக் கடன் வாங்கி இருந்தார். தற்போது கடனை சரிவரச் செலுத்த முடியாமல் திணறி வருகின்றார்.
பருவமலை பொய்த்தது:
காவேரி டெல்டாவிற்கு தெற்கே இருக்கும் சிவகங்கை கிராமங்கள், தண்ணீருக்கு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையையே நம்பி உள்ளன.
ஆனால் சமீப ஆண்டுகளில் மழை போதுமான அளவு பெய்யவில்லை.
இதுகுறித்து, காரைக்குடி உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் பொருளியல் மற்றும் கிராமப்புற வளர்ச்சி துறையின் தலைவராக இருக்கும் அண்ணாசாமி நாராயணமூர்த்தியை தொடர்பு கொண்டோம்.
அவர் கூறுகையில், ” “கடந்த 20-25 ஆண்டுகளாகத் தென்மேற்கு பருவமழை முற்றிலும் மாறிவிட்டது. “மக்கள் இன்னும் அதை நம்ப வில்லை ” என்றார்.
தமிழ்நாட்டிற்கு 70% மழையைத் தரும் வடகிழக்கு பருவமழை யின் போக்கும் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றது.
சிவகங்கையைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைவர் அர்ச்சுனன் ” முன்பெல்லாம் வடகிழக்கு பருவமழை செப்டம்பர்- நவம்பர் வரை பெய்யும். அது பின்பு 60 நாட்கள் (அக்டோபர் மற்றும் நவம்பர்)ஆகச் சுருங்கி விட்டது.
கடந்த ஆண்டு, வங்காள விரிகுடாவில்புயல் எச்சரிக்கை விடப்பட்ட போதெல்லாம் சிவகங்கையில் நல்ல மழை பெய்தது. இல்லையேல் இங்கு மழையில்லை ” என்றார்.
loan 2 g lending game
சம்பத்தின் வருமானம் பலவகைகளில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுடியில், பொதுவாய் இரண்டு பயிர்கள் விளைவிக்கப்படும்.
தென்மேற்கு பருவமழை நீர் கொண்டு நிலக்கடலை யும் வடகிழக்கு மழைநீர் கொண்டு அரிசியும் ஒராண்டில் பயிரிடப்படும். ஆனால் தற்போது தென்மேற்கு பருவமழை குறைந்து வருவதால், யாரும் விவசாயம் செய்வதில்லை.
மழை பொய்த்ததால், பல விவசாயிகள் தங்களின் கால்நடைகளை விற்கும் சூழ்நிலைக்க்கு தள்ளப்படுகின்றனர்.
சம்பத் ” என்னிடம் 50-60 வெள்ளாடும் இருந்தது. அவர்கள் அனைவரும், கடந்த இரண்டு ஆண்டுகளாக விற்பனை செய்து வருகின்றேன்”.
” அழகப்பா பல்கலைக்கழகத்தின் நாராயண மூர்த்தி. “விவசாயத்தில் செழிக்கவில்லை என்றால், கால்நடைகளும் செழிக்காது. ஏனெனில், பயிர் எச்சம் இல்லாமல், நீங்கள் எருமை வைத்திருக்க முடியாது.” என்றார்.
அரசு, அரிசியை 16 ரூபாய்க்கு வாங்க மறுப்பதால், தனியார் வியாபாரிகள் 12 ரூபாய்க்கு வாங்குகின்றனர். பூச்சிமருந்துகள் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லை.
தமிழ்நாட்டில் மக்களின் சராசரி வருமானம் உயர்ந்துள்ள போதிலும், மக்கள் கடன் அதிகமாக வாங்கத் துவங்கியுள்ளனர். அவர்கள் கல்வி, வீடு, திருமணம், மருத்துவ செலவுகள் போன்ற தேவைகளுக்காகக் கடன் பெறத் தயங்குவதில்லை” என்கிறார். இந்தியப் பொருளாதாரத்தை ஆராய்ந்து வரும், விஜயவாடாவைச் சேர்ந்த எஸ்.ஆனந்த்.
கடன் தேவை இருக்க, மலிவுக் கடன் கிடைக்காதது ஏன் ?:
loan 2 h marke
தமிழக அரசின் தவறு தான், எளியக் கடன் மறையக் காரணம்.
மாநில அரசு சுய உதவிக் குழுத் திட்டம், தமிழ்நாட்டில் ஏழை குடும்பங்களுக்கு ஒரு முக்கிய “கடன்” ஆதாரமாக இருந்தது.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கிராமங்களில் உள்ள சுமார் 15 பெண்கள் குழுக்களாகப் பிரித்து, அவர்கள் வங்கிக் கடன் பெறவும்,ஒழுங்காகத் திருப்பிச் செலுத்துவதையும்
கண்காணித்தனர்.
பல ஆண்டுகளாக, சுய உதவிக் குழுக்கள், ரூ 300,000 வரை கடன் பெற்று திரும்பச் செலுத்தி வந்தனர்.
2011 ஜெயலலிதா முதல்வரான பிறகு, என்.ஜி.ஓக்களை செயலிழக்கச் செய்தார். வங்கிகளுடன் இணைத்ததால், சுய உதவிக்குழுக்கள் கடன்களை திருப்பிச் செலுத்துவதில்லை. வங்கி ஊழியர்களும் அதைக் கண்டுகொள்வதில்லை.
கடன் வழங்கும் புதியவர்கள் யார் ?
ஜெயலலிதா அத்தகைய மோசமான முடிவை எடுக்கும் வரை, என்.ஜி.ஓக்ககள் சிறப்பாகச் செயல்பட்டு கொண்டிருந்தன.
வெங்கடசுப்ரமணியன் “என்.ஜி.ஓக்களின் ஈடுபாட்டால், முத்தூட் பைனான்ஸ் போன்ற தனியார் முதலைகள் ” கடன் வழங்க” கிராமங்களில் நுழைய முடியாத சூழல் இருந்தது.
” என்கிறார்.
மேலும், வெளிநாட்டில் பணியாற்றுபவர்களின் பெற்றோரும் கடன் வழங்கி வருகின்றனர். இவர்களைத் தவிர, அரசு ஊழியர்கள், தேவைக்கு அதிகமாய் சம்பாரிப்பவர்களும் “கடன் வழங்கி வருகின்றனர்.
இந்தத் தொழிலில் வரும் லாபத்தை கருத்தில் கொண்டு நாடார் சமூகத்தினர் அதிக அளவில் இந்தத் தொழிலில் ஈடு படுகின்றனர். நாடார் இளைஞர்கள், வடக்கே வந்து, ஒரு விடுதியில் தங்கி, கடன் வழங்கும் தொழிலில் ஈடுபடுகின்றனர்.
உதாரணமாய், ரூபாய் 5000 கடன் வழங்கினால், ₹ 500 பிடித்துக் கொள்வர். தினமும் 50 ரூபாயென நூறு நாட்கள் திரும்பித் தர வேண்டும்.
இதைக் கணக்கிட்டால் மாதம் “21% வட்டி ” வசூலிக்கப் படுகின்றது. இந்தக் கடன் ஒரு வருடத்திற்கு நீண்டால், 78% வட்டி வரை செலுத்த நேரிடும்.
சிலர் கடன் வாங்கி கடன் கொடுக்கும் தொழில் செய்கின்றனர்.
உதாரணமாய், ஒரு பெண்மணி 2% வட்டிக்கு கடன் வாங்கி 4% வட்டிக்கு விடுவார்.
பெரும்பாலானோர் தங்களின் கடனை திருமணத்தின்போது வரும் வரதட்சணை, மொய்ப் பணம் கொண்டு அடைக்கின்றனர்.
தஞ்சாவூர் பகுதிகளில் “மொய் விருந்து” நடத்தப்படுவது சகஜம். குறிப்பாக “கள்ளர் ” சமூகத்தினரிடையே மொய் விருந்து நடத்தி பனம் வசூலித்துக் கடன் அடைக்கும் பழக்கம் உள்ளது.
தமிழகத்தில் தொடரும் “சிறியக் கடன் தொடர்ந்தால், சில ஆண்டுகளில், திரும்பச் செலுத்த முடியாமல் மக்கள் திணறுவர். ஏற்கனவே கடன் தொல்லையால் தற்கொலை செய்வது தமிழகத்தில் அதிகரித்து வருகின்றது(படிக்க).  தமிழக அரசு, தனியார்  மைக்ரோ ஃபைனான்ஸ்” கம்பெனிகளை கட்டுப்படுத்தாவிட்டால் தற்கொலைகள் மேலும்  அதிகரிக்கும். பல வங்கிகள் திவாலாகும்.
தமிழக அரசு விழிக்குமா ?
உரிய நடவடிக்கை எடுக்குமா ?
 
 
நன்றி: ஸ்க்ரோல்.இன்