சென்னை:

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், திமுக காங்கிரஸ் தலைமையில் 9 கட்சிகள் இணைந்த மெகா கூட்டணி உருவாகி உள்ளது.

இந்த கூட்டணி, நாடாளுமன்ற தேர்தலில்  பாஜக அதிமுக அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழும் என நம்பப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப் பட்டு வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் விவரம் போன்ற வற்றில் பிசியாக செயல்பட்டு வருகின்றன.

தமிழகத்திலும், நாடாளுமன்ற தேர்தலை தேர்தலை எதிர்கொள்ள இந்த தடவை 3 அணிகள் உருவாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது. திமுக, காங்கிரஸ் தலைமையில் ஒரு அணியும், அதிமுக பாஜக தலைமையில் 2வது அணியும் அதிகரப்பூர்வமாக உருவாகி உள்ளது.

ஆனால், 3வது அணி உருவாக வாயப்பு இருப்பதாக ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்த நிலையில், டிடிவி தலைமையில், 3வது அணி அமைப்பதற்கான ஏற்பாடுகளும் திரைமறைவில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், திமுக தலைமையிலான கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, திமுகவுடன் மேலும் 8 கட்சிகள் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.

தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட மொத்தம் உள்ள 40 தொகுதிகளில், 20 தொகுதிகளில் திமுக களமிறங்குகிறது. மீதமுள்ள 20 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

திமுக காங்கிரஸ்  கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் 

1) திமுக – 20 தொகுதிகள்

2) காங்கிரஸ் கட்சி- 10 தொகுதிகள்

3) மதிமுக- 1 தொகுதி (இன்னொன்று ராஜ்யசபா)

4) விடுதலை சிறுத்தைகள் – 2 தொகுதிகள்

5) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – 2 தொகுதிகள்

6) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – 2 தொகுதிகள்

7) கொங்கு மக்கள் தேசிய கட்சி- 1 தொகுதி

8) இந்திய யூனியன் முஸ்லீம் லீக்- 1 தொகுதி

9) ஐக்கிய ஜனநாயக கட்சி – 1 தொகுதி

ஏற்கனவே திமுகவுக்கு ஆதரவு அளித்து வந்த மனிதநேய மக்கள் கட்சிக்கு இடம் ஒதுக்கப்பட வில்லை. இதன் காரணமாக அந்த அணி திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.