திருப்பூர்:

திருப்பூர் அருகே பிரதம மந்திரி கிசான் திட்டத்திற்கு விண்ணப்பித்த விவசாயிகளிடம் லஞ்சம் பெற்ற கூனம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ், குறு சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபா  3 தவணையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடை பெற்று வருகின்றன.

இந்த திட்டத்தின் கீழ் பலன் பெற, திருப்பூர் மாவட்டம் கூனம்பட்டி பகுதி விவசாயிகள் விண்ணப் பித்துள்ளனர். படிவத்தை பெற்றுக் கொண்ட கிராம நிர்வாக அலுவலர், அவர்களிடம் லஞ்சம் வாங்கினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. அதைத் தொடர்ந்து,. சம்பந்தப்பட்ட  விஏஓ கைது செய்யப்பட்டுள்ளார்.

அதுபோல கடந்த இரு நாட்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் உடுமலை குடிமங்கலம் ஒன்றியம் சோமவாரப்பட்டி அருகில் உள்ள ஆலமரத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவரிடம், சொட்டு நீர் பாசனம் தொடர்பாக சான்றிதழ் பெற  வடுகபாளையம் கிராம நிர்வாக அலுவலர் ரூ.2500 லஞ்சம் கேட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி என்பது என்ன?

நாடு முழுவதும் உள்ள சுமார் 12 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகள், 2 ஹேக்டேர்கள் வரை விவசாயம் செய்யக்கூடிய நிலம் வைத்திருப்பவர்களுக்கு, ஆண்டுக்கு ரூ.6000 ரொக்கம்  வழங்கப்படும் என மத்திய அறிவத்து உள்ளது. இந்த திட்டத்தின்படி நிதிஉதவி பெற  மத்திய வேளாண் அமைச்சகம் சார்பில் நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்காக மத்திய அரசு   ரூ.75,000 கோடி ஒதுக்கி உள்ளது. இந்த நிதி உதவி பெறும் நடைமுறை என்ன என்பதை மத்திய வேளாண் அமைச்சகம்தெரிவித்து உள்ளது.

2 ஹெக்டேர்கள் பயிர்செய்யக்கூடிய நிலம் வைத்திருக்கும் குடும்பத்தின் கணவன், மனைவி, மைனர் வாரிசு என்று வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறு, குறு விவசாயிகள் என்றால், கணவன், மனைவி மற்றும் மைனர் வாரிசு ஆகியோர் அடங்கிய குடும்பமாக இருக்க வேண்டும். அதாவது 2 ஹெக்டேர்களில் பயிர்செய்திருக்கிறார்கள் என்பது மாநில அல்லது யூனியன் பிரதேச ரெக்கார்டுகளில் பதிவாகியிருக்க வேண்டுவது அவசியம்.

இந்தத் திட்டத்தின் கீழ் முதல் தவனை மார்ச் 31க்குள் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும், ஆனால் 2வது தவணைக்கு ஆதார் அவசியம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பணக்கார விவசாயிகள், நிறுவனம்சார் நில உடைமையாளர்களுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் கிடையாது.

அதே போல் கீழ் வரும் விவசாயிகள் பிரிவினரும் இந்தத் திட்டத்தில் தகுதி பெற மாட்டார்கள்:

1. முன்னாள் மற்றும் இந்நால் அரசியலமைப்பு பதவி வகிப்பவர்கள்.

2. முன்னாள் இந்நாள் அமைச்சர்கள்/ மாநில அமைச்சர்கள் மற்றும் முன்னாள் இந்நாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் முன்னாள் இந்நாள் உறுப்பினர்கள், முன்னாள் இந்நாள் முனிசிபாலிட்டி மேயர்கள் மற்ரும் முன்னாள் இந்நாள் மாவட்ட பஞ்சாயத்து  தலைவர்கள்.

3.முன்னாள் இந்நாள் மத்திய/மாநில அரசு ஊழியர்கள்.

ஆனால் மேற்கூறிய பட்டியைல் கிளாஸ் 4 மற்றும் குரூப் டி ஊழியர்கள் அடங்கமாட்டார்கள்.

மாதம் ரூ.10,000 பென்ஷன் பெறும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் (இதிலும் கீழ்நிலை கிளாஸ் 4, குரூப் டி  பிரிவினருக்கு விலக்கு)

யாராவது தங்கள் சுயவிவரத்தைத் தவறாக அளித்து பயனடைந்தால் செலுத்தப்பட்ட தொகையை அவரிடமிருந்து திரும்பப் பெறப்படுவதோடு தண்டனைகளும் உண்டு.

பிரதமர்-கிசான் திட்டம் இந்த ஆண்டிலிருந்து அமலாகும், முதல் தவணை மார்ச்சில் வழங்கப்படும்.

இவ்வாறு மத்திய வேளாண் அமைச்சகம் அறிவித்துள்ளது.