மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கனிமொழி டிவிட்

Must read

சென்னை:

நாடாளுமன்ற தேர்தலில் திமுக போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அறிவித்தார்.

முன்னதாக முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் சமாதிக்கு சென்று, வேட்பாளர் பட்டியலை வைத்து வணங்கிய மு.க.ஸ்டாலின், பின்னர் அண்ணா அறிவாலயத்தில் வேட்பாளர்கள் பட்டிலை வெளியிட்டார்.

அந்த பட்டியலில் திமுக மகளிர் அணி தலைவரும், தற்போதைய ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழிக்கு தூத்துக்குடி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதை வரவேற்று கனிமொழி, ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

அதில், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கழகத் தலைவர் தளபதி  அவர்களுக்கும், பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்களுக்கும் என் நன்றி ..

40 பாராளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டமன்ற தொகுதிகளிலும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்… என்று பதிவிட்டு உள்ளார்.

More articles

Latest article