திமுக வேட்பாளர்கள் ஏ.வ.வேலு, பொன்முடி, ஜெ. கருணாநிதி விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 72.81 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் 3 மணி நிலவரப்படி, திமுக கூட்டணி 148 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 85 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
இந்நிலையில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எ.வ.வேலு, 80161 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தணிகைவேலை விட 59 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
திருக்கோவிலூர் தொகுதியில் 60,093 வாக்குகள் அதிகம் பெற்று திமுகவின் முன்னாள் அமைச்சர் க.பொன்முடி வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கலிவரதனை தோற்கடித்துள்ளார்.
எழும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெ. கருணாநிதி 47 ஆயிரத்து 673 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சத்தியநாராயணன் 42 ஆயிரத்து 968 வாக்குகள் பெற்றிருக்கிறார்.
நாகை தொகுதியில் அதிமுக வேட்பாளர் தங்க கதிரவனை வீழ்த்தி, விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் வெற்றி