‘நோட்டா’வை விட குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே கதிர்ஆனந்த் வெற்றி!

Must read

வேலூர்:

வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர் நோட்டா வாக்குகளை விட குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றுள்ளது நிரூபணமாகி உள்ளது.

வாக்கு எண்ணிக்கையின்போது, அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த நிலையில், வாணியம்பாடி தொகுதி வாக்குகள் திமுகவின் வெற்றியை உறுதி செய்தது. அங்கு இஸ்லாமி யர்கள் அதிக அளவு வசித்து வருவதால், அவர்களின் வாக்கு திமுகவின் வெற்றிக்கு உதவியது

இதையடுத்து, அதிமுகவை விட 7734 வாக்குகள் வித்தியாசத்தில்  கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்.

அதே வேளையில் வேலூர் மக்களவை தொகுதியில், நோட்டாவுக்கு  9292 வாக்குகள் கிடைத்துள்ள தகவலும் வெளியாகி உள்ளது. அதேவேளையில்,  நாம் தமிழர் கட்சியின் தீபலட்சுமியும் கணிசமான வாக்குகளைப் பெற்று அக்கட்சியின் வாக்கு வங்கியை தக்க வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கதிர்ஆனந்த் வெற்றியை திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில், நோட்டா பெற்ற 9292 வாக்குகளை விட குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது.

வாக்கு  விவரம் :

கதிர் ஆனந்த் (திமுக):4,83,099  – வெற்றி
 
ஏ.சி.சண்முகம் (அதிமுக): 4,75,365

வெற்றி வித்தியாசம் : 7734 வாக்குகள் 
 
தீப லட்சுமி (நாம் தமிழர்) : 26,880
 
நோட்டா : 9292  வாக்குகள்

 

More articles

Latest article