வேலூர் நாடாளுமன்ற தேர்தல் 2019 – பகல் 1:50 மணி நிலவரம்: 11,582 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை

Must read

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் பகல் 1:50 மணி நிலவரப்படி, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 11,582 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக இருந்த தேர்தல், அதிக அளவிலான பணப்பட்டுவாடா காரணமாக ரத்து செய்யப்பட்டது. சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கை சுற்றுக்களில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை வகித்து வந்தார்.

இந்நிலையில்,6ம் சுற்றுக்கு பிறகு திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். பகல் 1:30 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி,

அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம்: 4,53,295 வாக்குகள்

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்: 4,64,877 வாக்குகள்

என்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இரு வேட்பாளர்களுக்குமான வாக்கு வித்தியாசம் 11,582 வாக்குகளாக உள்ளது.

இதுவரை மொத்தம் 2 லட்சம் வாக்குகள் வரை எண்ணப்பட்டுள்ள நிலையில், இன்னும் 30 ஆயிரம் வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன. தொடர்ந்து திமுக முன்னிலை வகித்து வருவதால், கதிர் ஆனந்த் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

More articles

Latest article