கோவை: கோவை தொண்டாமுத்தூர் பகுதியைல் திமுக வேட்பாளராக போட்டியிடும் காரத்திகேய சிவசேனாதிபதி முன்னாள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நிர்வாக உறுப்பினரும்,நாட்டு மாடுகள், ஜல்லிக்கட்டு மாடுகள் தொடர்பான தன்னார்வலரும் , காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மையத் தலைவராகவும் இருந்து வருகிறார்.
இவர் சமீபத்தில் திமுகவில் இணைந்த நிலையில், அவருக்கு தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட திமுக தலைமை வாய்ப்பு வழங்கி உள்ளது. இவருக்கு ஆதரவாக கோவையில் பிரசாரம் செய்த திமுக நட்சத்திர பேச்சாளர் திண்டுக்கல் லியோனி,வெளிநாட்டு பசுக்களின் பாலைக் குடித்துக் குடித்து பெண்களின் இடுப்பு பலூன் பெருத்துப் போய் பேரல் போல் ஆகிவிட்டது என்றார்.
லியோனியின் பேச்சு சர்ச்சைக்குள்ளானது. இதுகுறித்து பல பெண்கள் அமைப்பினர் போர்க்கொடி தூக்கிய நிலையில், பெண்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், லியோனியின் கருத்து மன்னிப்பு கோருவதாக கார்த்திகேய சிவசேனாதிபதி தெரிவித்துள்ளார். கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் வாக்கு சேகரித்து பேசிய திமுக வேட்பாளர் காரத்திகேய சிவசேனாதிபதி , எஸ்.பி.வேலுமணி செய்த ஊழலைப் பற்றி பேசுவது தனிமனித தாக்குதல் அல்ல என்றவர், அவர் தமிழ் சமூகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் ஆபத்தானவர், அவருடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாராக உள்ளேன் என்றவர், கடைசியில், பிரசாரத்தின்போது, திண்டுக்கல் லியோனி பெண்கள் பற்றி பேசிய கருத்து வருத்ததிற்கு உரியது. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கைகூப்பி மன்னிப்பு கோரினார்.
பகிரங்கமாக மன்னிப்பு கோரிய கார்த்திகேய சிவசேனாதிபதியின் பெருந்தன்மை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.