சென்னை: ஏப்ரல் 3ம் தேதி முதல் தேர்தல் நடக்கும் ஏப்ரல் 6ம் தேதி வரை இருசக்கர வாகன பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்குப்பதிவுக்கான நாள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

இந் நிலையில், ஏப்ரல் 3ம் தேதி முதல் தேர்தல் நடக்கும் ஏப்ரல் 6ம் தேதி வரை இருசக்கர வாகன பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறி உள்ளதாவது:

இரு சக்கர வாகன பேரணி என்ற பெயரில் வாக்காளர்களை அச்சுறுத்துவதாக புகார்கள் எழுந்தன. எனவே, ஏப்ரல் 3ம் தேதி முதல் பைக் பேரணிக்கு தடை விதிக்கப்படுகிறது.

அதன்படி, ஏப்ரல் 3 முதல் தேர்தல் நடக்கும் ஏப்ரல் 6 வரை இரு சக்கர வாகன பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நாள் மற்றும் தேர்தலுக்கு முந்தைய 3 நாளில் தமிழகத்தில் எங்கும் வாகன பேரணி நடத்தக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.