இன்று மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சிகள் போராட்டம்

Must read

சென்னை

ன்று திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்துகின்றன.

டந்த மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில், மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்யாதது, பெட்ரோல் – டீசல் – சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு,  வேலையில்லா திண்டாட் டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் 30- ஆம் தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்று காலை 10 மணிக்கு தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவ தும் கண்டன போராட்டம் நடக்கிறது.  தற்போது கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளதால், வீடுகளுக்கு முன் போராட்டம் நடத்த உள்ளது.

தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ்  தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உட்பட கூட்டணி கட்சியினர் தங்கள் வீடுகள் முன் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

More articles

Latest article