வேலூர் நாடாளுமன்ற தேர்தல் 2019: தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளை சரிசமமாக பங்கிட்டுள்ள திமுக – அதிமுக

Must read

வேலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில், தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில், 3 தொகுதிகளை அதிமுக தன்வசப்படுத்தியுள்ளது.

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக இருந்த தேர்தல், அதிக அளவிலான பணப்பட்டுவாடா காரணமாக ரத்து செய்யப்பட்டது. சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ முடிவுகள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம், அணைக்கட்டு, குடியாத்தம், ஆம்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளையும், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், வேலூர், கீழ்வைத்தினன் குப்பம் மற்றும் வானியம்பாடி ஆகிய தொகுதிகளையும் தன்வசப்படுத்தியுள்ளனர்.

தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை வகித்து வருகிறார்.

More articles

Latest article