சென்னை:
மிழகம் முழுவதும் விவசாயிகள் சார்பில் வரும்ட 27ந்தேதி வீடுகளில் கருப்புகொடி ஏற்றும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு திமுக ஆதரவு அளிக்கும் என கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சாரச் சட்டத் திருத்தம்-2020 மற்றும் ஜூன் 3, 2020 இல் பிறப்பிக்கப்பட்ட மூன்று அவசரச் சட்டங்களான அத்தியாவசியப் பொருட்கள் சட்டம்-1955 இல் திருத்தம், வேளாண் விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல்) அவசரச் சட்டம்-2020, விவசாயிகள் (அதிகாரப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதி வேளாண் சேவைகள் அவசரச் சட்டம்-2020 ஆகியவை விவசாயிகளுக்குப் பெரும் அநீதி இழைக்கும் சட்டங்கள் என குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இந்த சட்டங்களை எதிர்த்து, தமிழகம் முழுவதும் உள்ள விசாயிகள் வரும்   27ந்தேதி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து உள்ளனர்.
இந்த போராட்டத்துக்கு ஏற்கனவே மதிமுக  முழுமையான ஆதரவை அளிக்கிறது. வேளாண் தொழிலைப் பாதுகாக்க மதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என வைகோ  தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், திமுகவும் ஆதரவு அளிக்கும் என்று ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
மின்சார சட்டத்திருத்தம் உள்ளிட்ட சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தருவதாக கூறியுள்ள ஸ்டாலின், விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் கையெழுத்து இயக்க போராட்டத்திற்கும்ஜூலை 27 இல் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டத்திற்கும் ஆதரவு அளிப்பதாக தெரிவித்து உள்ளர்.