சென்னை: தமிழகத்தில் திமுக கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெறும்! டைம்ஸ்நவ் சிவோட்டர்இணைந்து நடத்திய  கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த  2016 சட்டமன்ற தேர்தலில் திமுக பெற்ற வாக்குகளை விட தற்போது, வாக்கு வங்கி அதிகரித்துள்ளது என்றும், அதிமுக  11.6 சதவீதம் வாக்குகளை இழந்துள்ளதும் என்றும் தெரிவித்து உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னு 28 நாட்களே உள்ளன. தேர்தல் கூட்டணி, தொகுதிப்பங்கீடு என அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வரும் நிலையில், தேர்தல் பிரசாரங்களும் கலைகட்டத் தொடங்கி உள்ளன.

இந்த தேர்தலில் திமுக தலைமையில் தோழமை கட்சகிளான காங்கிரஸ்,இந்திய கம்யூனிஸ்ட்டு, விசிக, மதிமுக உள்பட பல கட்சிகள் இணைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒருபுறமும், அதிமுக, பாஜக, பாமக இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியும் பிரதான கூட்டணியாக களமிறங்கி உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் தனியாக ஒரு கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்தே களமிறங்கி உள்ள நிலையில், அமமுக வுடன் அசாதுதீன் ஓவைசி கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடு கின்றன. இதனால் பலமுனை போட்டிகள் ஏற்பட்டு உள்ளது.  இதன் வாயிலாக  தமிழக மக்களின் வாக்குகள் சிதறும் வாய்ப்புகள் உருவாகி உள்ளது.

இதற்கிடையில், திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும், மக்களிடையே வாக்குகளை பெறும் நோக்கில், இலவசங்களை வாரி  இறைத்து வருகின்றன. ஆட்சி தக்க வைத்துக்கொள்ள அதிமுக அரசும், ஆட்சியை கைப்பற்றியே ஆக வேண்டும் என்று வெறித்தனமாக திமுகவும், பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையுடன்  களமிறங்கி உள்ள. இந்த நிலையில், தமிழக மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்பது குறித்து பிரபல ஆங்கில இதழான டைம்ஸ்நவ், சிவோட்டர் கருத்து கணிப்பு செய்து வெளியிட்டு உள்ளது.

இந்த கருத்துக்கணிப்பில், இந்த முறை திமுகவுக்கு வாக்கு வங்கி அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலைவிட தற்போது 3.8 சதவீதம்  வாங்கி வங்கி அதிகரித்துள்ளதால், திமுக கூட்டணி  158 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது.  அதாவது தமிழகத்தில் 43.2 சதவீதம் வாக்குகள் திமுக கூட்டணிக்கு கிடைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

அதே வேளையில் அதிமுக கூட்டணிக்கு 2016ல் கிடைத்த வாக்குகளை விட வாக்கு வங்கி குறைந்துள்ளது, சுமார் 11.6 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும்,  தற்போதைய நிலையில், அதிமுக கூட்டணிக்கு 32.1 சதவீதம் வாக்குகளே கிடைக்கும் என்று கூறியிருப்பதுடன், அதிக பட்சமாக அதிமுக கூட்டணிக்கு 65 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவித்து உள்ளது.

அதிமுகவில் இருந்த குறையும் வாக்குகள்,  மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல, ஓவை கட்சியின் தாக்கத்தால், தமுமுக மனிதநேய மக்கள் கட்சி போன்ற இஸ்லாமிய கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

தமிழக மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தி நிறுவனமானது,  தமிழக அரசின் செயல்திறனில் வாக்காளர்கள் திருப்தியடைகிறார்களா? உள்பட பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

அதில், மிகவும் திருப்தி – 15.05% பேரும,  ஓரளவிற்கு திருப்தி – 35.69% பேரும்,  திருப்தி இல்லை – 38.79% பேரும்இ  தெரியாது / சொல்ல முடியாது – 10.47% பேரும் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.

தமிழ்நாட்டின்படி, கூட்டணி வாரியாக யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு கிடைத்துள்ள பதில் மூலம்,

திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு கடந்த 2016 சட்டமன்ற தேர்தலைவிட இந்த தேர்தலில்   3.8% வாக்கு வங்கி அதிகரித்துள்ளது.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சுமார் 11.6 சதவிகித வாக்குகளை இழந்துள்ளது.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 7.1 சதவிகிம் ஆதரவு உளளது.

டிடிவி தினகரனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 6.5 சதவிகிதம் வாக்குகளும்,  நாம் தமிழர் உள்பட மற்ற கட்சியினருக்கு  5.8%  வாக்குவங்கி உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.