சென்னை: திமுக கூட்டணியில், இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அவைகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம் இன்று வெளியிடப்பட உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்தது. அதன்படி, . மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இதைடுத்து, , ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் இந்த முறை 5 முனை போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், வேட்பாளர்களை களமிறக்க அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இதன் காரணமாக தமிழ்நாடு அரசியல் களம் தகிக்கத் தொடங்கி உள்ளது.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், தே.மு.தி.க, வி.சி.க உள்ளிட்ட தி.மு.க கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்.
இந்த தேர்தலில், உதயசூரியன் சின்னத்தில் 175 வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகள் சின்னத்தில் 59 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றன.
[youtube-feed feed=1]