தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்த 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 147 தொகுதிகளில் முன்னிலைப் பெற்று ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை பெறுகிறது.
கொளத்தூர் தொகுதியில் எட்டு சுற்றுகளின் முடிவில் தி.மு.க தலைவர் ஸ்டாலின், அதிமுக வேட்பாளரை விட 17,476 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
மு.க.ஸ்டாலின் – 26,789
ஆதி ராஜாராம் – 9313
சேப்பாக்கம் தொகுதி
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் 16,819 வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை பெற்றுள்ளார்.
திமுக 21654
அதிமுக 4835 6வது சுற்றுகள் முடிவில் 16819 வாக்கு வித்தியாசத்தில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை
வேளச்சேரி தொகுதியில் ஆறாவது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா 616 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்
காங்கிரஸ் – 12648, அதிமுக – 12032, மநீம – 4224
நாம் தமிழர் – 2875, அமமுக – 434
தாம்பரம் தொகுதியில் 3வது சுற்றில் 4001 வாக்குகள் வித்யாசத்தில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.
திமுக – 10253., அதிமுக – 6252. அமமுக – 384. நாதக – 1824., மநீம – 1219.
நோட்டா – 145.
திமுக முன்னிலை.
ராயபுரம் தொகுதியில் திமுக முன்னிலையில் தொடர்கிறது. அங்கு
திமுக 8716, அதிமுக 5836 வாக்குளும் பெற்றுள்ளனர். திமுக 2880 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.
தி.நகர் தொகுதியின் ஐந்தாம் சுற்று முடிவில், 3835 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.
அதிமுக:9208, திமுக:13043, அமமுக:164, மநீம:2939, நா.த.க:2213
ஆலந்தூர் தொகுதியின் 4 வது சுற்று முடிவில்8647 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசன் முன்னிலை பெற்றுள்ளார்.
அதிமுக 14357, திமுக 23004
எழும்பூர் தொகுதியின் தி.மு.க வேட்பாளர் பரந்தாமன் 6,474 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக கட்டணி வேட்பாளர் ஜான்பாண்டியனை முந்தியுள்ளார்.
துறைமுகம் தொகுதியில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. திமுக வேட்பாளர் சேகர்பாபு 12,050 வாக்குகளும், பாஜக வேட்பாளர் 11,654 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்பு பின்னடைவை சந்தித்துள்ளார். இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலன் முன்னிலையில் உள்ளார்.
செஞ்சி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செஞ்சி கே எஸ் மஸ்தான் – 48307 பெற்று முன்னணியில் உள்ளார்.
திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் திமுக எ.வ.வேலு– 36312 வாக்குகளும் பாஜக தணிகைவேல்– 12189 பெற்றுள்ளனர்.
24123வாக்குகள் அதிகம் பெற்று எ.வ.வேலு முன்னிலையில் உள்ளார்.