சென்னை

மாநிலங்களவை தேர்தலில் திமுகவுக்கு 3 இடங்களும் காங்கிரஸுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இடம் பெற்று வருகிறது.   இந்த கூட்டணி கடந்த மக்களவை தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற பேரவை தேர்தல்களில் வெற்றி வாகை சூடியது.   இந்த கூட்டணி வரும் மாநிலங்களவை தேர்தலில் தொடர உள்ளது.

தமிழகத்தில் காலியாகி உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்வு வரும் ஜூன் மாதம் 10 ஆம் தேதி நடைபெற உள்ளன.   இதில் திமுக கூட்டணி 4 இடங்களில் போட்டி இடுகின்றன.

இந்த நான்கு இடங்களில் 3 இடங்கள் திமுக வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.   காங்கிரஸ் கட்சிக்கு மீதமுள்ள 1 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில்  தஞ்சை சு கல்யாண சுந்தரம், கே ஆர் என் ராஜேஷ்குமார், ரா கிரிராஜன் ஆகியோர் போட்டி இட உள்ள்ளனர்

[youtube-feed feed=1]