சென்னை: 7 பேர் விடுதலையில், முடிவெடுக்க ஜனாதிபதிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக ஆளுநர் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலிருக்கும் 7 பேர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசு தலைவருக்கே உள்ளதாக கூறி ஆளுநர் தெரிவித்திருந்தார். ஆளுநரின் இந்த முடிவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

அந்த வகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தும் தமது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலையில்,முடிவு எடுக்க குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.

பல ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும், காலதாமதம் செய்யாமல் நல்ல தீர்ப்பு வழங்கி, விடுதலை செய்ய வேண்டும் என்று விஜயகாந்த் கூறியிருக்கிறார்.