சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என கூறிய பிரேமலதா,  விஜயகாந்த் சினிமாவில் நடிப்பதாக வரும் தகவல் தவறானது என்றும் விளக்கமளித்துள்ளார்.

உடல்நிலை பாதிப்பு காரணமாக, வீட்டிலேயே பல ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறர் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த். இவர் மீண்டும் படத்தில் நடிக்கப்போவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வந்தன. பேசுவதற்கும், நிற்பதற்கும் சிரமப்படும் விஜயகாந்த், படித்தில் நடிக்கப்போகிறார் என்ற தகவல் தேமுதிகவினரிடையே உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக,  கூட்டணி. தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு  ஆய்வு செய்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா பின்னர் செய்தியளார்களை சந்தித்தார். அப்போது,  தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட உள்ள  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக திட்டமிட்டபடி  தனித்துப் போட்டியிடும் என்றார்.

தேமுதிகவுக்கு  செயல் தலைவரை அறிவிக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து ஆலோசனை செய்து,  கட்சியின் செயல் தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பை தேமுதிக  பொதுக்குழுவில்  தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் அறிவிப்பார என்றார்.

கேப்டன் மீண்டும் சினிமாவில்  நடிக்கிறார் என்று பரவி வரும் தகவல் தவறானனது என்று கூறியவர், விஜயகாந்த்  அரசியல் பணிகளை கவனித்துக் கொண்டு ஓய்வில் இருந்து வருகிறார் என்றார்.