சென்னை:
தமிழகத்தின் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இன்று காலை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களைச் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக உயிர்ப்பலிகளும் அதிகரித்து வருகிறது.
டெங்குவை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று திருவள்ளுர் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று ஆய்வு செய்தார். இன்று இரண்டாவது நாளாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்று டெங்கு வால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். தே.மு.தி.க. சார்பில் நோயாளிகளுக்கு கொசு வலை உள்பட பல பொருள்கள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை குறித்தும் மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மருத்துவமனையை முதலில்ல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அங்கிருந்த பணியாளர்களிடம் கூறினார். டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு போதிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கவில்லை. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை விட டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பதே முக்கியம். டெங்கு காய்ச்சலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு அரசு ரூ.2000 வழங்குவதாக கூறி உள்ளது. அது போதாது தொகையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்றார்.
மேலும், செய்தியாளர்கள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று கேட்டதற்கு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடாது. ஆனால், அதற்கு முன்பே சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்புள்ளது என்றார்.
ஓபிஎஸ் டில்லி விசிட் குறித்த கேள்விக்கு டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் கூறி என்ன நடக்கப் போகிறது? என்றும், மத்திய குழுவினரின் ஆய்வு காரணமாக என்ன நடக்கப்போகிறது என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.