பெங்களூரு

ர்நாடக அரசு மேகதாது அணை கட்ட உரியச் சட்ட போராட்டம் நடத்தி விரைவில் அனுமதி பெற முயலும் என டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார்.

வரும் 1 ஆம் தேதி வரை காவிரியில் இருந்து தமிழகத்திற்குத் தினமும் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடக் கர்நாடக அரசுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளது.

இன்று கர்நாடக அரசின் நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது,

”கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்பட்டிருந்தால் தற்போது தண்ணீர் பிரச்சினை இவ்வளவு தீவிரமடைந்திருக்காது .காவிரி நீரை மேகதாது அணை மூலம் தேக்கி வைத்து வறட்சி காலங்களில் தண்ணீரைப் பங்கிட்டுக் கொள்ள முடியும்.

இந்த மேகதாது அணை விவகாரத்தைச் சட்ட ரீதியாக உச்சநீதிமன்றத்திலும், காவிரி மேலாண்மை ஆணையத்திலும் முன்வைக்க உள்ளோம். , கர்நாடக அரசு இதற்காக அனைத்து சட்ட போராட்டங்களையும் நடத்தி விரைவில் மேகதாது அணை கட்டுவதற்கு ஒப்புதல் பெற முயற்சி செய்யும்”

என்று தெரிவித்துள்ளார்.