சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழ்நாட்டில் மதுவிற்பனை ஆறாக ஓடியுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த 3 நாளில் மாநிலம் முழுவதும் ரூ.708 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. நேற்று (தீபாவளி) மட்டும் 244.08 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி இருக்கிறது.

பண்டிகை தினங்களில்  மது விற்பனை அதிகரித்து வருவது வழக்கம்.  அப்படித்தான் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாகவே டாஸ்மாக்கில் மது விற்பனை அமோகமாக  இருந்தது  மதுவிற்பனையில் மதுரை முதலிடத்தில் உள்ளது. 8கோடி மக்கள் தொகை உள்ள மாநிலத்தில் 708 கோடி ரூபாய்க்க மதுவிற்பனை செய்யப்பட்டிருப்பது, மாநில அரசின் சாதனைதான்.

கடந்த மூன்று தினங்களில் 708.29 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி இருக்கிறது.   கடந்த ஆண்டினைக் காட்டிலும் இந்த  தீபாவளி தினமான நேற்றைய தினம் மட்டும் 244.08 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி இருக்கிறது.

இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களில் ரூ.708 கோடி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் ரூ.244.08 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தமாக மதுரை மண்டலத்தில் தான் 154 கோடி ரூபாய் மது விற்பனையாகி தமிழ்நாட்டில் முதலிடம் வகிக்கிறது.   இதற்கு அடுத்தபடியாக சேலம் மண்டலத்தில் 142 கோடி ரூபாய் மது விற்பனையாக இருக்கிறது.

திருச்சி மண்டலத்தில் 140 கோடி ரூபாயும்,  சென்னை மண்டலத்தில் 139 கோடி ரூபாயும்,  அதற்கடுத்தபடியாக கோவை மண்டலத்தில் 133 கோடி ரூபாயும் மது விற்பனையாகி இருக்கிறது. பண்டிகை தினத்தில்  டாஸ்மாக்கில் மது விற்பனை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே போவது குறிப்பிடத்தக்கது.