சென்னை: 25ஆண்டுகளுக்கு பிறகு செங்கோட்டை – மயிலாடுதுறை இடையே முன்பதிவில்லாத தினசரி பயணிகள் ரயில் இன்றுமுதல் மீண்டும் இயக்கப்படுகிறது. அதுபோல தீபாவளி முடிந்து பொதுமக்கள் மீண்டும் தங்களது நகர வாழ்க்கைக்கு திரும்பும் வகையில், தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறைக்கு இன்றுமுதல் தினசரி முன்பதிவில்லா பயணிகள் ரயில் மீண்டும் இயக்கப்படுகிறது. செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு மதுரை, திருச்சி வழியாக மயிலாடுதுறை சென்றடைகிறது.

இந்த ரயில் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த நிலையில், போதிய பயணிகள் இல்லாமை, அகல ரயில்பாதையாக மாற்றம் போன்றவற்றால் நிறத்தப்பட்ட நிலையில் இன்றுமுதல் மீண்டும் இயக்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

மயிலாடுதுறைக்குதிருவனந்தபுரம்–சென்னை சென்ட்ரல் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06056/55) இன்று (25-ம் தேதி)  திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

மறுமார்க்கத்தில் இந்த ரயில் 26-ம்தேதி சென்னை சென்ட்ரலில் பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும்.

இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.