சென்னை: நேற்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட  நிலையில், மாநிலம் முழுவதும் நேற்று 280 இடங்களில் தீபாவளி தீவிபத்து ஏற்பட்டுள்ளது என தீயணைப்பு தெரிவித்து உள்ளது.  நேர கட்டுப்பாட்டு விதிகளை மீறி பட்டாசு வடித்ததாக 163 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக நடைபெற்றது. தீபாவளியை  பாதுகாப்பான முறையில் கொண்டாடுமாறு காவல்துறையினரும், தீயணைப்பு துறையினரும், பல்வேறு அறிவுறுத்தல்களையும், விழிப்புணர்வு நிக்ழச்சியையும் நடத்தினர். மேலும், மாசு ஏற்படாத வகையில் பசுமை பட்டாசுகளை உபயோகப்படியும், தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து jமிழகஅரசு அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், சென்னை உள்பட மாநிலம் முழுவதும் நேற்று 280 தீவிபத்து சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது. அதிக பட்சமாக சென்னையில் 180 தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் யாரும் உயிரிழக்கவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேர கட்டுப்பாட்டு விதிகளை மீறி பட்டாசு வடித்ததாக 163 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கீழ்கட்டளையில் ஹார்டுவேர் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ராக்கெட் வெடி வெடித்த போது அதிலிருந்து தீப்பொறி பட்டு, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பைப்புகள் எரிந்து சேதம் அடைந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.