சென்னை: தீபாவளியை முன்னிட்டு, சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், கோவைக்கு ஆறு சிறப்பு இரயில்களை இயக்க தெற்கு இரயில்வே முடிவு செய்துள்ளது. அதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தீபாவளிப் பண்டிகை மிகத் தொன்மையான பண்டிகையாகும். வாத்ஸ்யாயனர் எழுதிய நூலில் ‘யட்ஷ ராத்திரி’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இது கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று இரவில் கொண்டாடப்படுகிறது. இதை ‘சுகராத்திரி’ என்றும் சொல்வதுண்டு. தீபாவளி என்றாலே பொதுவாக அது ஐப்பசி மாதம்தான் வரும். ஆனால் சில ஆண்டுகளில் அபூர்வமாக புரட்டாசி மாதமே வந்ததுண்டு. 1944, 1952, 1990-ஆம் ஆண்டுகளில் புரட்டாசி மாதம் 31-ஆம் தேதி தீபாவளி வந்தது. நடப்பாண்டு தீபாவளி பண்டிகை eவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது
விஷ்ணு புராணத்தில் தீபாவளியன்று விடியற்காலையில் நீராடி மகாலட்சுமியை பூஜை செய்து தீபங்களை வீட்டில் பல இடங்களில் வைத்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கி.பி.1117-ல் வாழ்ந்த சாளுக்கிய திருபுவன மன்னன் ஆண்டுதோறும் சாத்யாயர் என்ற அறிஞருக்கு தீபாவளிப் பரிசு வழங்கியதாக கன்னடத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று கூறுகிறது.
இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் தீபாவளிக்கு தனிச்சிறப்பு உண்டு. தீபாவளி (Deepavali, Diwali) அல்லது தீப ஒளித்திருநாள் என்பது பல மாநிலங்களில் ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாகும். இது இந்து, சீக்கியம், சைனம் மற்றும் பௌத்தம் மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா இலங்கை சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, வரும் நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊருகளுக்கு செல்வார்கள் அதற்காக இரயில்வேயில், 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு துவங்கிவிட்டது. இதனால் தென் மாவட்ட விரைவு ரயில்களில், அனைத்து டிக்கெட்டுகளும் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன. குறிப்பாக, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, மதுரை, செங்கோட்டை மற்றும் கோவை விரைவு ரயில்களில் காத்திருப்போர் பட்டியல், 300 யை தாண்டியுள்ளது. அதனால், ஆறு சிறப்பு ரயில்களை இயக்க, தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
அதன்படி, சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் வழித்தடத்தில், நான்கு சிறப்பு இரயில்களும், கோவை வழித்தடத்தில், இரண்டு சிறப்பு ரயில்களும் இயக்க முடிவு செய்துள்ளோம். இதற்கான அறிவிப்பு, அடுத்த மாதம் இறுதியில் வெளியிடப்படும். இது தவிர, முக்கிய விரைவு ரயில்களில், இரண்டு அல்லது மூன்று பெட்டிகளை கூடுதலாக இணைத்து இயக்கப்படும்” இவ்வாறு கூறியுள்ளனர்.