நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் , சமூக அக்கறையாளர் என பல முகம் கொண்டவர் நடிகர் ராகவா லாரன்ஸ்.
ராகவா லாரன்சின் பிறந்தநாளும் தீபாவளியும் ஒரே நாளில் வருகிறது.
ஆனால் அவர் இந்த வருட பிறந்தநாளை ஒரு சில காரனங்களுக்காக கொண்டாடவில்லை என்று அறிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், எனது பிறந்த நாளும், தீபாவளி பண்டிகையும் ஒரே நாளில் வருவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
தன்னுடைய ஆசிரமத்தில் வசிக்கும் குழந்தைகளின் சந்தோசத்திற்காக இந்த தீபாவளியை ஆசிரமத்தில் வசிக்கும் குழந்தைகளுடன் கொண்டாட திட்டமிட்டுள்ளேன். அதனால் என்னுடைய பிறந்தநாளை கொண்டாடவில்லை.
அனைத்து பத்திரிக்கை தொலைக்காட்சி இணையதள நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்றார்.

Patrikai.com official YouTube Channel