சென்னை

தமிழகத்தில்  இன்றைய (10/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 5,989 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 9,26,816 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,886 பேர் உயிர் இழந்து 8,76,257 பேர் குணம் அடைந்து தற்போது 37,673 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 1,977 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,63,129 பேர் பாதிக்கப்பட்டு 4,312 பேர் உயிர் இழந்து 2,44,435 பேர் குணம் அடைந்து தற்போது 14,382 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 62,575 பேர் பாதிக்கப்பட்டு 699 பேர் உயிர் இழந்து 58,199 பேர் குணம் அடைந்து தற்போது 3,677 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 60,122 பேர் பாதிக்கப்பட்டு 843 பேர் உயிர் இழந்து 55,863 பேர் குணம் அடைந்து தற்போது 3,416 பேர் சிகிச்சையில் உள்ளனர்.