தெலுங்கானா மாநிலம் கம்மாரெட்டி மாவட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அப்போது ரேஷன் கடை ஒன்றில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மத்திய அரசின் மானியத்தில் விநியோகிக்கப்படும் நியாயவிலைக் கடைகளில் பிரதமர் மோடியின் படம் ஏன் இடம்பெறவில்லை என்று அம்மாவட்ட ஆட்சி தலைவரிடம் கடுமை காட்டினார்.

மேலும் மோடியின் படம் ஏன் இடம்பெற வேண்டும் என்று அவருக்கு பிரசங்கமும் செய்தார்.

இந்த நிலையில், அம்மாநிலத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களில் பிரதமர் மோடி படத்தை ஒட்டி விலை ரூ. 1105 என்று டி.ஆர்.எஸ். கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர்.

ஏற்கனவே ரேஷன் கடையில் மோடி படம் குறித்த நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு இது துதிபாடலின் உச்சம் என்று சமூக வலைதளத்தில் வறுத்தெடுத்து வரும் நிலையில் விலைவாசி உயர்வை குறிப்பிட்டு தற்போது சிலிண்டரில் மோடி படத்தை ஒட்டி விநியோகித்து வருவது மத்திய நிதி அமைச்சரின் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைக்கு தெலுங்கானா அரசு நல்ல பாடம் புகட்டியுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.