ராமண்ணா வியூவ்ஸ்

எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர்.

டந்த சட்டமன்றத் தேர்தல் வேட்புமனு தாக்கலின் போதும், சமீபத்திய ராஜ்யசபா வேட்புமனுதாக்கலின் போதும் அரசியல்வாதிகளின் சொத்துக்கள் குறித்த விவரங்கள் பலதரப்பாலும் பரபர்பபாக அலசப்பட்டன.  அம்மா, மகனுக்கும், மகன் தந்தக்கும், அப்பா மகளுக்கும்  கோடிக்கணக்கணக்கில் கடன் (!) கொடுத்து “உதவிக்கொண்டது” வெளியானது.
இதற்கிடையே, 570கோடி யாருடையது என்ற சர்ச்சை இன்னமும் தொடர்கிறது. இன்னொரு பக்கம், “வருமானத்துக்கு மீறி சொத்து சேர்பப்தில் தவறென்ன” என்ற கருத்தை வெளியிட்டிருக்கிறார்கள் நீதிமான்கள்.
இந்த நிலையில், ஏதோ இதழில் படித்த எம்.ஜி.ஆர். பேட்டி, நினைவுக்கு வந்தது.
எம்.ஜி.ஆரிடம், “உங்களுக்கு என்று  சொத்துக்களைச் சேர்த்து வச்சிக்காம,  இப்படி  வாரி வாரி கொடுத்துக்கிட்டே இருக்கீங்களே…  ?” என்று கேட்கிறார்கள்.
அதற்கு எம்.ஜி.ஆர். சொன்ன பதில் இது:
“ சொத்துக்கள் என்பது  கடைசிவரை நம்மகிட்டயே இருக்கும்னு நினைக்கிறது தப்பான எண்ணம்.
என்னை முதன் முதலா கதாநாயகனா போட்டு படம் எடுத்தவர்  ஜூபிடர் சோமு. இந்த ஜூபிடர் ஸ்டுடியோ அப்போ அவருக்கு சொந்தமாக இருந்தது. அவர் எதிர்லே வந்து நிக்கவே எல்லோரும் பயப்படுவோம்.
ராமண்ணா
ராமண்ணா

இப்போ அதே ஸ்டூடியோவுக்கு நானும் ஒரு  பங்குதாரரா இருக்கேன்.
என்னைவிட அனுபவத்திலயும், ஆற்றல்லேயும் பலமடங்கு உயர்ந்தவரான அவருக்கே அப்படி ஒரு நிலைமை வந்ததுச்சு.. இதில நான் மட்டும் எத்தனை நாள் இந்த ஸ்டூடியோவுக்கு முதலாளியா இருந்திடப்போறேன்…?
ஆனா, சில பேரு சட்டத்தின் பாதுகாப்பு  தங்களுக்கு  இருக்குன்னு சொத்தையும் பணத்தையும் தேவைக்கு மேல  சேர்த்து சேர்த்து வெச்சிக்கிறாங்க. நம்ம பாதுகாப்பிலே இல்லாதது, சட்டத்தின் பாதுகாப்பில் எத்தனை நாள் வாழ்ந்திட முடியும்?
தவிர,  இந்த சொத்து, பணம் எல்லாம் யார் கொடுத்தாங்க.. ?  மக்கள் கொடுத்ததுதானே.. ? அவங்க எனக்கு தந்ததிலிருந்துதான் நான் தர்றேன்.
தேவைக்கு மேல் பணத்தை பயனில்லாம சேர்த்து வச்சி மகிழ என்ன இருக்கு..?
மத்தவங்களுக்கு  உதவறப்போ கிடைக்கிற மகிழ்ச்சிதான் ரொம்ப பெருசு!”