அமெரிக்க பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது நிறுவனத்தை வாங்கும் திறன் படைத்த இந்திய நிறுவனங்களுடன் இதற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும், குறிப்பாக, சன் நெட்ஒர்க் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறனுடன் இதுதொடர்பாக பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

தவிர, என்.டி.டி.வி.யை சமீபத்தில் வாங்கிய அதானி குழுமம் இந்தியாவில் தனது தொலைக்காட்சி ஊடகத்தை மேலும் வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வரும் அதேவேளையில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது இந்திய ஒளிபரப்பு உரிமையை விற்க முன்வந்திருப்பது அதானி நிறுவனத்திற்கு சாதகமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு உரிமையை ரிலையன்ஸ் குழுமத்தின் வியாகாம் நிறுவனத்திடம் இழந்த டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் இதுதொடர்பாக ரிலையன்ஸ் குழுமத்துடன் ஏற்கனவே பேச்சு நடத்தியதாகத் தெரிகிறது.

இந்த நிலையில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இந்திய ஒளிபரப்பு உரிமை யாரிடம் செல்லும் என்பது இன்னும் சில வாரங்களில் தெரியவரும்.

[youtube-feed feed=1]