சென்னை,
அதிமுகவில் ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட மோதலை தொடர்ந்து டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் அதிரடியாக தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து அவர்களின் தொகுதிகள் காலியாக இருப்பதாக அரசிதழிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
அதையடுத்து அவர்களை மனுவாக தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து இன்று 18 எம்எல்ஏக்கள் சார்பாக மனு தாக்கல் செய்யப்படம் என்று கூறப்படுகிறது.
இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் இந்த வழக்கு தொடர்பாக முறையிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் இன்று அவசர ஆலோசனை நடத்துகின்றனர்.
அதேபோல, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற இருக்கிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், இன்று மாலை தமிழகம் வருகிறார்.