டில்லி:

2013ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை பிரதமர் மோடி வெளிநாடு சென்று வந்த ஏர் இந்தியா விமானத்தின் செலவுத் தொகையை வெளியிடுமாறு வெளியுறவுத் துறைக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுளளது.

ஓய்வுபெற்ற காமாண்டோ லோகேஷ் பத்ரா 2013-14 மற்றும் 2016-17ம் ஆண்டின் பிரதமர் மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணத்திற்கான ஏர் இந்தியா விமான செலவுத் தொகை எவ்வளவு என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரியிருந்தார்.

இதில் வெளியுறவுத் துறை சரியான தகவல்களை அளிக்காமல் அறையும் குறையுமாக பதில் அளித்திருந்தது. இதையடுத்து மத்திய தகவல் ஆணையத்திடம் மேல் முறையீடு செய்தார். இதன் அடிப்படையில் ஆணையர் ஆர்.கே. மாத்தூர் விசாரணை மேற்கொண்டார்.

அப்போது, மோடி இந்திய விமானப் படை விமானம் மற்றும் ஏர் இந்தியா விமானங்களில் வெளிநாடுகளுக்கு பல முறை சென்று வந்துள்ளார். இந்த தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் அதிகளவில் உள்ளது.

மேலும், பல பயணங்களுக்கு இன்னும் பணம் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது. இவை அனைத்தும் இணைத்து பதில் அளிப்பதற்கான பதிவேடுகளை தயாரிக்க அதிக அலுவலர்கள் தேவைப்படுவார்கள் என்ற அமைச்சகத்தின் கருத்தை ஆணையம் நிராகரித்து தகவல்களை அளிக்க உத்தரவிட்டது.