பெங்களூரு: 2022ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலம் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்ந்து வந்த  ‘சின்ன தல’ என்று சிஎஸ்கே ரசிகர்களால் அன்போது அழைக்கப்படும் ரெய்னா, தென்னாப்பிரிக்கா வீரர் டுபிளெசிஸ்-ஐ  சிஎஸ்கே அணி நிர்வாகம் ஏலம் எடுக்காமல் தவிர்த்தது  தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடப்பாண்டு நடைபெற ஐபிஎல் போட்டிகளில் 10 அணிகள் பங்குபெற்றுள்ளன. இதனால் ஆட்டங்களும் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக அணி வீரர்கள் ஏலம் கடந்த இரு நாட்களாக பெங்களூருவில் நடைபெற்று முடிவடைந்தது. இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணிக்கு 15 வீரர்கள் எடுக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே தோனி, ஜடேஜா, மொயின் அலி மற்றும் ருத்ராஜ் ட 4 வீரர்கள் தக்க வைக்கப்பட்டிருந்த நிலையில்,  மேலும் 15 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளதால் தற்போது 19 வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ளனர்.

சென்னை அணியின் அடுத்த கேப்டனாக அறியப்பட்டவர் ரெய்னா. சிஎஸ்கே ரசிகர்களால் சின்னதல என்று அன்பாக அழைக்கப்பட்டவர். 2016ஆம் ஆண்டு வரை ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை அடித்த வீரர் ரெய்னா. செம ஃபில்டர் மற்றும் சுழற்பந்தையும் வீச கூடியவர். சிஎஸ்கே அணிக்கு தோனி இல்லை என்றால் கேப்டனாக ரெய்னா தான் செயல்படுவார். சிஎஸ்கே அணியின் வெற்றிக்காக பாடுபடும் சில வீரர்களில் ரெய்னாவும் ஒருவர் என்பதை மறந்துவிட முடியாது.  அவரை சிஎஸ்கே அணி உள்பட எந்தவொரு ஐபிஎல் அணிகளும் ஏலம் எடுக்காதது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தான் சிஎஸ்கே அணியில் எடுக்கப்படாத நிலையில், சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கும், சிஎஸ்கே அணியின் மஞ்சள் நினைவுகளுக்கும் சூப்பர் நன்றி என்று டிவிட் பதிவிட்டுள்ளார்.

அதுபோல சிஎஸ்கே அணியின் முக்கிய பில்லராக திகழ்ந்தவர் தென்னாப்பிரிக்கா வீரர் டுபிளெசிஸ். கடந்த 10 வருடங்களாக சிஎஸ்கே அணிக்காக ஆடியவரை, இந்த ஆண்டு சிஎஸ்கே அணி ஏலம் எடுக்காமல் புறக்கணித்தது. ஃபாஃப் டு பிளெசிஸ்  ரூ. 7 கோடிக்கு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வாங்கு தனது அணிக்கு பெருமை சேர்த்துக்கொண்டது.

சிஎஸ்கே அணி குறித்து டிவிட் பதிவிட்டுள்ள டுபிளெசிஸ், 10 வருடங்களாக சிஎஸ்கே அணிக்காக ஆடியபோது பல நெகிழ்ச்சியான அனுபவங்கள் கிடைத்துள்ளன. அது ஒதுபோதும் நீங்காது. இப்போது புதிய அணியில் இடம்பெற்றுள்ளேன்.  புதிய களத்தை துடிப்போடு எதிர்கொள்ள காத்திருக்கிறேன் என்று கூறியதுடன, சிஎஸ்கே ரசிகர்கள், சக வீரர்கள், நிர்வாகனத்திதுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பட்டியல்

1 தோனி (கேப்டன்)

2 ஜடேஜா

  1. மொயின் அலி
  2. ருத்ராஜ்
  3. ராபின் உத்தப்பா
  4. பிராவோ
  5. அம்பத்தி ராயுடு
  6. தீபக் சஹார்
  7. கே.எம்.ஆசிப்
  8. துஷார்
  9. ஷிவம் துபே
  10. மஹேஷ்
  11. ராஜ் வர்தன்
  12. சிமர்ஜித்
  13. டி.கான்வே
  14. டி.பிரிட்டோரியஸ்
  15. எம்.சாண்ட்னர்
  16. மில்னே
  17. எஸ்.சேனாதிபதி