ரியோடிஜெனிரோ:
ரியோவில் நடைபெற்றுவரும் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம் மயிரிழையில் நழுவியது.
பிரேசிலில் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது.
பளுதூக்கும் போட்டியில் இந்திய வீரர் ஃபார்மன் பாஷா கடுமையாகப் போராடி நான்காம் இடத்தைப் பிடித்தார்.
ஆன்களுக்காக 49 கிலோ பிரிவில் இந்தியாவின் ஃபார்மன் பாஷா (வயது 42) முதல் சுற்றில் 140 கிலோவை அநாயாசமாக தூக்கி அனைவரையும் அசத்தினார். ஆனால் அடுத்தடுத்த பிரிவுகளான 150 மற்றும் 155 கிலோ சுற்றுக்களில் அவர் தோல்வியடைந்து நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இந்தப் போட்டியில் காங் வான் லீ தங்கப்பதக்கத்தை வென்றார். இவர் தூக்கியது 181 கிலோவாகும். வெள்ளிப் பதக்கத்தை ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த ஓமர் காராடாவும், வெண்கலத்தை ஹங்கேரியின் நண்டோர் டுன்கெல்லும் வென்றனர்.