ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களுக்கு தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடையே பேசிய அவரிடம் மாஸ் ஹீரோவான விஜயுடன் சேர்ந்து படம் பண்ணுவது குறித்து திட்டம் ஏதாவது இருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த வெற்றிமாறன் இதுகுறித்து நீண்டநாட்களாக பேசி வருவதாகவும். தான் இப்போது இயக்கி வரும் படங்களை முடித்த பிறகு இதுகுறித்து மீண்டும் பேச இருப்பதாகவும் தெரிவித்தார்.

“நான் சொல்லும் கதை அவருக்குப் பிடித்திருந்தால் படமெடுக்க நா ரெடி” என்றும் வெற்றிமாறன் கூறினார்.

முன்னணி இயக்குனருடன் நடிகர் விஜய் இணைய இருப்பது குறித்து வெளியான இந்த தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.