கவுதமனை குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யக்கூடாது! ஐகோர்ட்டு அதிரடி

சென்னை,

மிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வரும் டைரக்டர் கவுதமனை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

கிண்டி கத்திபாரா ஜங்ஷனில்  பூட்டு போட்டு போராட்டம் நடத்திய  வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கவுதமனை,  குண்டாஸ் சட்டத்தில் கீழ் கைது செய்யகூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 13ந்தேதி சென்னையின் மையப்பகுதியான கிண்டி கத்திப்பாரா ஜங்ஷனில், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும்,  மத்திய அரசை கண்டித்தும்   டைரக்டர் கவுதமன் தலைமையிலான குழுவினர்  திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தின்போது,  கத்திப்பரா ஜங்ஷனின்  நான்கு பக்கமும் சாலையை இரும்பு சங்கிலியில் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக சென்னை கடுமையான பாதிப்புக்குள்ளாது. நகரில் மையப்பகுதியான  கத்திப்பாரா ஜங்ஷனில் இந்த போராட்டம் நடைபெற்றதால் விமான நிலையம் செல்பவர்களும், வெளி மாவட்டம் செல்லும் வாகனங்கள், சென்னைக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் போக வழியில்லாமல் ஸ்தம்பித்து நின்றன.

இதன் காரணமாக நடிகர் கவுதமன் உள்பட போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து ஜாமினில் வெளிவந்த கவுதமன், மே17 இயக்கம் திருமுருகன் சென்னை மெரினாவில்  நடத்திய முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டும் கைதானார்.

இதற்கிடையில், மே17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் உள்பட 4 பேரை தமிழக போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர்.

இதன் காரணமாக, தன்னையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கூடாது என தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் கவுதமன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில், நடிகர் கவுதமனை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

டைரக்டர் கவுதமர் ஏற்கனவே ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட வர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Director Gauthaman should not be arrested in the Kuntas Act! chennai high court order, கவுதமனை குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யக்கூடாது! ஐகோர்ட்டு அதிரடி