சென்னை:

லைமை செயலகத்தில் 16 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து, வளர்ச்சிப் பணிகள் குறித்து, மாதந்தோறும் அறிக்கை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தமிழக மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாநாடு, இன்றும், நாளையும் முதல்வர் எடப்பாடி தலைமை யில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று முதல்நாள் கூட்டம் தொடங்கியது.

இதில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், தலைமைச் செயலாளர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இன்றைய கூட்டத்தில் கூட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி, , ராமநாதபுரம், மதுரை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகை, திருவாரூர் ஆகிய 16 மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சித்தலைவர்களும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட ஆட்சியர்கள், தங்களது மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்களை குறித்து தெரிவித்தனர். துறை ரீதியாகவும்  வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அதையடுத்து பேசிய முதல்வர் எடப்பாடி,  அரசு திட்டங்களின் செயல்பாடுகள் மக்களை சென்றடையும் வகையில் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ரசு திட்டங்களின் நிறைவேற்றம் குறித்து மாதந்தோறும் ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், மழை நீரை சேமிக்க வேண்டும், நீராதாரங்களை பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என்று கூறியவர், மாவட்ட ஆட்சியர்கள் சுறுசுறுப்பாக களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாளைய ஆலோசனை கூட்டத்தில்,  வேலூர் நீங்கலாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல் கலெக்டர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.