மிழக பொறியியல் கல்லூரிகளில் பி.இ., நேரடி 2-ஆம் ஆண்டு சேர்க்கைக்கு ஆன்லைனில்  இன்று (செவ்வாய்க்கிழமை – மே 24) முதல் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்று மாநில கலந்தாய்வு மையச் செயலர் அ. மாலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் மேலும் கூறியதாவது: டிப்ளமோ, பி.எஸ்.சி., முடித்தவர்கள் தமிழக பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டு வகுப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வழக்கம்போல், காரைக்குடி அழகப்பச்செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பெறப்பட இருக்கின்றன.
 
bigstockphoto_businessman_reading_an_e-book_453884-205x120

இதற்காக முதல்முறையாக ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதனை மே 24 -ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் செயலர், ஏ.சி.சி.இ.டி, காரைக்குடி என்று ரூ. 300-க்கான காசோலை இணைக்கப்பட்டு, ஜூன் 10- ஆம் தேதி மாலை 5 மணிக்குள் செயலர், பி.இ., நேரடி இரண்டாண்டு மாநில கலந்தாய்வு மையம், அழகப்பச் செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காரைக்குடி-6 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்” என்று தெரிவித்தார்.