திண்டுக்கல்:

ஜெயலலிதா போல் எங்களுக்கு துணிச்சல் இல்லாததால் பா.ஜக.வை ஆதரிக்கிறோம் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பாஜ ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அதிமுக.வின் அனைத்து அணிகளும் ஒட்டுமொத்தமாக ஆதரவு தெரிவித்துள்ளது. இது தமிழக மக்கள் மட்டுமின்றி எதிர்கட்சிகளிடமும் பெரும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. பாஜ வேட்பாளரை கண்மூடித்தனமாக ஆதரிப்பது குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதிலளித்துள்ளார்.

திண்டுக்கல்லில் நடந்த ஒரு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டர். அங்கு அவர் பேசுகையில், ‘‘ ஜெயலலிதா முதல்வராக இருந்த போது யாருடனும் கூட்டணி சேரவில்லை. சிங்கம் போல் தனித்து நின்றார். 37 மக்களவை உறுப்பினர்கள், 13 மாநிலங்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி அதிமுகவை இந்தியாவிலேயே 3வது இடத்திற்கு கொண்டு வந்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அந்த துணிவு எங்களுக்கு கிடையாது. ஊரோடு ஒத்து போவது என்பது போல தமிழ்நாட்டுக்கு நல்லது செய்வதற்காக அன்புடன் இணைந்து செயல்படுகிறோம். மேலும் வேறு வழியில்லாமல் இதை செய்கிறோம்’’ என்றார்.