திருச்சி

ஆர் கே நகர் இடைத்தேர்தலில் வேட்பாளரை சசிகலா தேர்வு செய்வார் எனவும் தாம் போட்டியிட தயார் என்றும் டி டி வி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீரங்கத்தில் அ தி மு க அம்மா அணியின் சார்பில் நேற்று நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.   இந்நிகழ்வில் டிடிவி தினமரன் கலந்துக் கொண்டு பொதுமக்களு நிலவேம்பு குடி நீர் வழங்கினார்.  அதை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை தினகரன் நிகழ்த்தினார்.

அந்த சந்திப்பின் போது, “தமிழகம் டெங்கு காய்ச்சலால் கடுமையாக பாதிப்பு அடைந்து பலர் மரணம் அடைந்துள்ளனர்.  ஆனால் ஆட்சியில் உள்ளவர்கள் அதனை மறைக்க மேடையில் ஏதேதோ பேசுகின்றனர்.   எல்லாவற்றுக்கும் மேலாக எடப்பாடி பழனிச்சாமி கதை எல்லாம் மேடையில் சொல்கிறார்.   இது புலியை பார்த்து  பூனை சூடு போட்டுக்கொண்டதற்கு ஒப்பானது.  தற்போது தொண்டர்களுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் ஓ பி எஸ் உண்மை சொரூபம் தெரிந்துவிட்டது.  சட்டமன்ற தொடர் கூடியதும் எடப்பாடி ஆட்சியை நாம் வீட்டுக்கு அனுப்பி விடுவோம்.

ஆர் கே நகர் இடை தேர்தலில் நான் போட்டியிட தயாராக இருக்கிறேன்.   ஆனால்  வேட்பாளர் யார் என்பதை சசிகலா பொதுக்குழுவை கலந்தாய்ந்து முடிவு செய்வார்.  நமது தொண்டர்கள் இப்போதே தேர்தல் பணியில் இறங்கி விட்டனர்.  அண்ணன் தம்பித்துரை அனைத்து அணிகளும் இணைய வேண்டும் என கூறியதை வரவேற்கிறேன்.   அனைத்து அணியினரும் பொதுச்செயலாளர் சசிகலாவின் தலைமைய ஏற்று நடக்க ஒப்புக் கொள்ளவேண்டும்

இந்த ஆட்சி நிலைக்கும் என்ற எண்ணத்தில் எங்களுக்கு எதிராக காவல்துறை செயல்படுகின்றனர்.   நீட் தேர்வுக்கான எங்கள் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி தரவில்லை.  நேற்றே ஸ்ரீரங்கத்தில் நிலவேம்புக் குடிநீர் வழங்க திட்டமிட்டதற்கு அனுமதி அளிக்கவில்லை.   நீண்ட போராட்டத்துக்குப் பின் இன்று அனுமதி கிடைத்தது.   அமைச்சர்களுக்கு ஆதரவாக நடக்கும் அதிகாரிகளும் போலீசாரும் விரைவில் நீதிமன்றத்தில் நிற்கும் காலம் வரும்” என டிடி வி தினகரன் தெரிவித்துள்ளார்.