சென்னை

டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை விலை குறித்த டிஜிட்டல் போர்டு நடைமுறைக்கு வந்துள்ளது.

தற்போது தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 238 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன இந்த ‘டாஸ்மாக்’ கடைகளை நவீனமயமாக்கும் முயற்சிகளில் டாஸ்மாக் நிர்வாகம் கவனம் செலுத்தி உள்ளது.

அதில் ஒரு பகுதியாக மதுபானங்கள் எவ்வளவு விலை என்பது தெரியும் வகையில் ‘டிஜிட்டல் ‘ போர்டுகள் வைக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியானது. இதன்படி மதுகுடிப்போர் மதுபானங்களின் விலையை அறிந்துகொள்ள டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் போர்டு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த போர்டு மூலம் எந்தெந்த மதுபானங்கள் எந்த விலையில் விற்கப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள முடியும்.  முதல்கட்டமாக. மாவட்டத்துக்கு 5 கடைகள் என 200 டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் போர்டு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.