பல்பூர்

காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் பாஜகவைக் கடுமையாகத் தாக்கி உள்ளார்.

கர்நாடகா  மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.   மாநிலத்தில் முதல்வரைத் தேர்வு செய்ய  பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.  காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றிக்குப் பலரும் புகழ்மாலை சூட்டி வருகின்றனர்.  நேற்று ஜபல்பூரில் ம பி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவருமான  திக் விஜய் சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார்/

அப்போது அவர்,

“நமது தர்மம் சனாதனம் ஆகும். நாங்கள் இந்துத்துவத்தை நாங்கள் கருதுவதில்லை. தம்மை ஏற்காதவனைத் தடியால் அடி; அவர்களது வீட்டை இடித்துத் தள்ளு; பணத்தைக் கொள்ளையடி இதுதான் இந்துத்துவா தர்மம் ஆகும்.

ஆஞ்சநேயரோடு பஜ்ரங் தளம் அமைப்பை ஆஞ்சநேயரோடு பிரதமர் மோடி ஒப்பிட்டது வலியை ஏற்படுத்தியது. ஜபல்பூரில் காங்கிரஸ் அலுவலகத்தை இந்த குண்டர் கூட்டம்தான் தாக்கி நாசப்படுத்தியது.  பாஜகவினர் ஆஞ்சநேயரை பஜ்ரங் தளம் என்று முழங்குவது ஆஞ்சநேயரை அவமதிப்பது ஆகும்.  அவர்கள் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.

பஜ்ரங் தளம் அமைப்பு கர்நாடகாவில் தடை செய்யப்படும் எனக் காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதியைப் பொறுத்தவரை, வெறுப்பை பரப்புவார்களுக்கு எதிராக அவர்கள் எந்த மதித்தவர்களாக இருந்தாலும், அமைப்பாக இருந்தாலும் அவர்கள் மீது வழக்குப் பதிய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. நாங்கள் அதனைப் பின்பற்றுவோம்”

என்று தெரிவித்துள்ளார்.