சென்னை: இஸ்லாமிய மசூதிகளில் பணியாற்றி வரும் உலமாக்களின்  ஓய்வூதிய வயது 50லிருந்து 40 ஆக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, மாற்றுத்திறனாளி உலமாக்களுக்கு இனிமேல் 40வயதுக்கு மேல் ஓய்வூதியம் வழங்கப்படும் வகையில் சலுகை அறிவித்துள்ளது.

கடந்த தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, மாற்றுத்திறனாளி உலமாக்களுக்கு உலமா ஓய்வூதியம் வழங்குவதற்கான வயது  ஆக குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, தற்போது ,மாற்றுத்திறனாளி உலமாக்களுக்கான ஓய்வூதியம் பெறும் வயது குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி,ஓய்வூதியம் பெறுவதற்கான வயது வரம்பு 50-ல் இருந்து 40-ஆக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

முன்னதாக, மௌலவி, பேஷ் இமாம், மோதினார்கள் உள்ளிட்ட உலமாக்களுக்கு உலமா ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது உலமாக்களுக்கு மாதம் ரூ.3000/- உலமா ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.