போட்டி வேறு நட்பு வேறு : நிரூபித்த டோனி

ண்டன்

ந்தியா – பாகிஸ்தான் .இடையே இன்று கிரிக்கெட் இறுதிப் போட்டி நடக்கும் தறுவாயில் டோனி தனது டிவிட்டர் பக்கத்தில் பாக் வீரரின் குழந்தையுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிந்து போட்டி வேறு, நட்பு வேறு என நிருபித்துள்ளார்.

இன்று விராட் கோஹ்லி தலைமையில் லண்டனில் இந்தியா – பாகிஸ்தான் இடையில் இறுதிப் போட்டி நடைபெறப்போவது தெரிந்ததே.    ஏதோ பங்காளி சண்டை என்னும் அளவில் இந்தப் போட்டியை ரசிகர்கள் வெறியாக பார்த்து விமர்சித்து வருகின்றனர்.

இந்தியாவின் முன்னாள் கேப்டன் டோனி,  இவர் சமீபத்தில் பாக் வீரரூம், நண்பருமான சர்ஃப்ராஸ் அகமதை சந்தித்து உள்ளார்.       அவரது மகன் அப்துல்லாவை தூக்கி வைத்துக் கொண்டு ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.   இந்த புகைப்படம் தற்போது ட்விட்டரில் வெளி வந்து போட்டி என்பது வேறு, நட்பு என்பது வேறு என்பதை உலகுக்கு காட்டியுள்ளது


English Summary
Dhonis photo proves that sport is beyond boundries